12 ராசிகாரர்களுக்கு இன்றைய ராசிபலன் பலன்…!!!

Published by
kavitha

இன்று (27.10.2018 ) நாள் 12 ராசிகாரர்களுக்கு பலன் எப்படி இருக்கிறது பார்ப்போம்
மேஷ ராசிகாரர்களுக்கு :
Image result for mesha rasi
இன்றைய தேவைகள் பூர்த்தியாகும் நாள். உங்களால் முடியாத காரியம் ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். இனத்தார் பகை மாறும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அனைத்தும் வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும் நாள் இன்று.
ரிஷப ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப உங்களுக்கு வரவு வந்து கொண்டிருக்கும். பிள்ளைகளால் விரயம் உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி இன்று மகிழ்வீர்கள். தூரதேசப் பயணம் தொடர்பான தகவல்கள் வாயில் கதை தட்ட வரலாம்.
மிதுன ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உங்களுக்கு மேலோங்கும். வரவு திருப்தி தரும் என்றாலும் விரயம் இரு மடங்காகலாம் அதனால் சிக்னத்தை கடைபிடியுங்கள். சுபகாரிய பேச்சுக்கள் உங்களுக்கு முடிவாகும்.
கடக ராசிகாரர்களுக்கு :

உங்களின் உறவினர் பகை அகலும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி இன்று கிடைக்கும். உங்களுக்கு மேலொங்கும் ஊர்மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கொள்வீர்கள்
சிம்ம ராசிகாரர்களுக்கு :

இன்று உங்களுக்கு தனவரவு தாரளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக்கொள்வீர்கள்.இன்று சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை தரும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை இன்று அகலும்.
கன்னி ராசிகாரர்களுக்கு :

நீங்கள் உழைத்து முன்னேறி உயர்வடைய நினைக்கும் நாள்.உங்களின் ஆசை மற்றும் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொட்ட காரியத்தில் இன்று வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும்.
துலாம் ராசிகாரர்களுக்கு :

இன்று நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டாகும். குடும்பச்சுமை கூடும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
விருச்சக ராசிகாரர்களுக்கு :

இந்த ராசிகாரர்களின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவடையும் நாள். இன்று துணிவும், தன்னம்பிக்கையும் கூடுகின்ற நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சான்றோர்களின் சந்திப்பால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும் நல்ல நாள்.
தனுசு ராசிகாரர்களுக்கு :

உங்களின் உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாள். உங்களுக்கு உலாவரும் கிரகங்களில் சனி பகவன் பலம் பெறுவதால் அனுமனை வழிபடுவது நல்ல பலனை தரும். ஆர்வம் காட்டாத செயலால் அதிக விரயம் உண்டு. இடமாற்றம், வீடுமாற்றம் உங்களுக்கு உறுதியாகலாம்.
மகர ராசிகாரர்களுக்கு : 

இன்று உங்களின் வழக்குகளில் சாதகம் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடையும். பிரபலமானவர்களைப் பிரயாணத்தில் சந்தித்து மகிழ்வீர்கள்.தெய்வங்களின் திருப்பணிக்கு கொடை கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். இன்று வரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.
கும்ப ராசிகாரர்களுக்கு : 

இன்று உங்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு தாங்கள் பெருமைப்படுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து வரும் அனுகூலச் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். பயணம் எதிர்பார்த்த நல்ல பலன்களைத் தரும்.
மீன ராசிகாரர்களுக்கு :  

இன்று உங்களுக்கு உங்களின் நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கும் யோகம் ஏற்பட்டுள்ளது. தொழில் வெற்றி நடைபோடும். நீண்ட நாள் எண்ணம் இன்று  நிறைவேறும்.
 
மேலும் ஆன்மீக (ம) ஜோதிட தகவலுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
 

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

14 minutes ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

2 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

2 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

3 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

3 hours ago