தென்திருப்பதியில் கருட சேவை வெகுசிறப்பு…!
தைத்திருவோணம் மற்றும் தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சியானது நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள் மற்றும் சங்காணி வெங்கடாசல பெருமாள் மற்றும் நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் அந்த கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபம் நடந்தது.இதில் மாலை 6 மணிக்கு கரியமாணிக்க பெருமாள் கோவில்களில் இருந்து அனைத்து சுவாமிகளும் எழுந்தருளி சந்தி விநாயகர் கோவில், லாலா சந்திர முக்கில் 5 கருட வாகனங்களில் உள்ள பெருமாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது.
பெரிய தேரடி திடல் அருகில் வந்தடைந்த சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது இங்கு இருந்து நெல்லையப்பர் தேரடி திடல் பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.