புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும் அற்புதங்களும் ஏராளாம்.
அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும்.
அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் மத்தியில் குங்குமத்தினால் வைத்து இருப்பார்கள் பார்ப்பதற்கே அத்துனை அழகாக இருக்கும்.இன்று அவற்றை எல்லாம் இழந்து பொட்டு வைப்பது எல்லாம் ஓல்டு பேஷன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் நம் முன்னோர் பொட்டிலும் ஒரு புதிரை விதைத்து உள்ளனர்.
புருவ மத்தியில் பொட்டு வைப்பதினால் நமக்கு பயனே.எப்படி என்றால் புருவ மத்யம் ,உடம்பில் இருக்கும் மர்ம ஸ்தலங்களில் ஒன்று.அதன் பாதுகாப்புக்கு பொட்டு உதவும்.மஞ்சளில் உருவெடுத்த குங்குமம் தொல் வியாதியை அண்ட விடாது.அங்கு ரோமம் வளராமலும் இருக்கும்.
ஒரு விஷயம் சட்டென்று நினைவில் வராமல் தவிப்பவன் தன்னை அறியாமல் அவன் விரலானது புருவ மத்தியைத் தட்டும் போது சிறிது நேரத்தில் நினைவில் வந்துவிடும்.அங்கு தட்டினால் நினைவிற்கு வரும் என்ற நம்பிக்கை எப்படியோ நம்முள் புகுந்துவிட்டது.
திருமணத்தில் கணவரோடு சங்கமாகும் பொது கன்னியின் புருவ மத்யத்தை,தர்ப்பையால் தடவி விடப் பரிந்துரைக்கும் தர்மசாஸ்திரமானது -இதமஹம் யா.., என்று கூறுகிறது.
கணவன் வீட்டில் புதியவர்களைச் சந்திக்கும் போது அவர்களிடம் சிக்கலின்றிச் செயல்படும் வாய்ப்பையும் அது ஈட்டித் தரும்.திருமண் ,திருநீறு ,சந்தனம்,சாந்து போன்றவை முகத்துக்கு அழகு தருவதோடு சுகாதாரத்தையும் தருகிறது.
பொட்டு வைப்பதனால் நம்முடைய பாபம் போகும்,தூய்மை பெரும்,செயல்பாடு சிறக்கும் என்று -மிருத்திகே ஹனமே பாபம் என்று சாஸ்திரம் கூறுகிறது.மேலும் மங்கள பொருட்களான மஞ்சளான குங்குமம் இட்டுக்கொள்வது சிறப்பு தருவதோடு சிறப்படையாவும் செய்கின்றது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…