சிவராத்திரி விரதத்தின் வகைகள் பற்றிய விவரங்கள் !!!!!

This article gives inforrmation about Details of the types of Shivratri fast-shivarathiri viruthathin vakaikal patriya viparankal

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்:

மகா சிவராத்திரி

யோக சிவராத்திரி

நித்திய சிவராத்திரி

பட்ச சிவராத்திரி

மாத சிவராத்திரி

மகா சிவராத்திரி:மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

யோக சிவராத்திரி:

(சோமவார நாளன்று)திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

நித்திய சிவராத்திரி:ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும்.

பட்ச சிவராத்திரி:தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.

மாத சிவராத்திரி:மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில்

வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில்,

ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில்,

ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில்,

ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில்

புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில்,

ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில்,

கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில்,

மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில்,

தை மாதம் சுக்லபட்ச திருதியையில்,

மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில்,

பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

இந்த 5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.