சித்திரை திருவிழா 2024 .!கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவது எப்போது?

kallalagar

சித்திரை திருவிழா 2024- கள்ளழகர் ஆற்றில் எப்போது இறங்குவார், ஏன் இறங்குகிறார் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம் .

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.

தேரோட்டம் 2024:

சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாள் தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நேர்முட்டி பகுதியில் காலை 5.15,  மணிக்கு துவங்கி5,40  மணிக்குள் நடைபெறும் .அதைத்தொடர்ந்து ஆறு முப்பது மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுதல் :

சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக  அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரை பத்தாம் நாள் நடைபெறவுள்ளது .

காலை 5 .50 மணியிலிருந்து 6.10க்குள் வைகை ஆற்றில் தங்க குதிரையில் அழகர் எழுந்தருளுவார்.திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்நிகழ்வு தேனூரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அழகர் ஏன் ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா?

சுதபஸ்[வண்டக  முனிவர் ]  என்ற மகரிஷி கங்கை ஆற்றில் நீராடி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிகிறார். இந்நிலையில் அந்த வழியாக வந்த துர்வாச முனிவரை மகரிஷி கவனிக்காமல் இருப்பதால், துர்வாச முனிவர் அவருக்கு தவளையாக மாறும் சாபத்தை இடுகிறார்.

இதிலிருந்து தனக்கு விமோசனம் கிடைக்க என்ன செய்வது என்று மகரிஷி கேட்டதும்” வைகை ஆற்றில் நீ தவம் செய்து கொண்டிரு சித்ரா பௌர்ணமி மறுநாள்  கள்ளழகர் உமக்கு பாவ  விமோசனம் தருவார் எனக் கூறினார்.

அதேபோல் அழகரும் அன்றைய தினத்தில் வந்து போவதாக புராணங்கள் கூறுகிறது . இதன்  காரணமாக தான் அழகர் ஆற்றில் இறங்குகிறார் . இந்நிகழ்வு சோழவந்தான் அருகில் தேனூரில் நடைபெற்றதாகும்.இன்றும் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

ஆனால் திருமலை நாயக்கர் சைவ மற்றும் வைணவ சமயத்தின் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் ஊர் கூடி தேர் இழுப்பதற்காகவும் கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்கள் அனைத்து வரலாற்றுச் சிறப்பும் ,பாரம்பரியமும்  மிக்கவை. மனிதர்கள் வாழ்வில் இவை முக்கியமான பகுதி எனலாம் .கொண்டாட்டங்கள் மனிதர்களை புதுப்பிப்பதாக உளவியல் கூறுகிறது .

மனிதர்களின் வறண்ட வாழ்க்கையில் ஆட்டமும் பாட்டமும் நம்மை சலிப்பில் இருந்து விடுபடச் செய்து சமூகத்தோடு உறவாட வைத்து மகிழ்ச்சியும் புத்துணர்வையும் அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today