உங்கள் பாவங்கள் தீர ரதசப்தமியை கொண்டாடுங்கள்..!

rathasapthami

நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024 அன்று ரதசப்தமி வர இருக்கிறது. இந்நாளின்  சிறப்பு மற்றும் பாவம் போக்கும் குளியல் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரதசப்தமியின்  சிறப்பு

ரதசப்தமியை  சூரிய ஜெயந்தி எனவும் கூறுவர், சூரிய பகவானுக்கு உரிய மிக முக்கிய தினங்களில் ரதசப்தமியும்  ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் ரதசப்தமி வரும். தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன் ரத சப்தமி அன்றிலிருந்து வடக்கு பாதையில் பயணிக்கிறது.

குளியல் முறை மற்றும் நேரம்:

இன்றைய தினம் எருக்க இலை வைத்து குளித்தால் கர்ம வினை நீங்கும் என்பது ஐதீகம். இந்த இலை மகாபாரதத்தில் பீஷ்மரின் பாவத்தை நீக்கிய இலை எனவும் கூறுவர்.

எருக்க  இலை குளியல்

  • நம் முன்கூட்டியே ஏழு எருக்க  இலைகளை பறித்து , குளிப்பதற்கு முன் கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து இரண்டு இலைகளை தோல் பகுதியில் வைத்து எங்களுடைய ஏழு பிறவி பாவங்களும் விலக அருள் புரிக என சூரிய பகவானின் மந்திரத்தை கூறி மனம் உருகி வேண்டிக்கொண்டு அந்த இலைகளை கீழே வைத்து விடவும்.
  • பிறகு இதுபோல் இரு காது பகுதிகளிலும் இலைகளை வைத்து மந்திரங்களை கூற வேண்டும். பின்பு கண் பகுதியில் இலைகளை வைத்து மந்திரங்களை கூறவும்.கண்  பகுதியில் வைக்கும் போது அந்த இலையின் பால் பட்டுவிடாமல் கவனமாக வைக்க வேண்டும்.
  • பிறகு சிரசு பகுதியில் வைத்து வழிபடவும். இதை செய்யும் பொழுது எருக்க இலை முன்பகுதி நம்மை நோக்கியும் அடிப்பகுதி வெளியே பார்த்தும் இருக்க வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்த பிறகு அந்த இலைகளை ஒன்றாக்கி நுனிப்பகுதி நம்மை நோக்கியவாறு நமது இரு கைகளிலும் வைத்து மீண்டும் ஒரு முறை சூரிய பகவானுக்குரிய மந்திரத்தை கூறி அதை நமது சிரசில் வைக்கவும். சிரசில் வைக்கும் போதும் இலையின் முன் பகுதி நம் சிரசை பார்த்தும் இலையின் பின்பகுதி மேல் நோக்கியும் இருத்தல் வேண்டும். பிறகு ஏழு முறை தலைக்கு தண்ணீரை ஊற்றி விட்டு குளித்து பூஜை செய்யலாம்.

பூஜையில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் வைக்கலாம், குறிப்பாக சூரிய பகவானுக்கு பிடித்த கோதுமையை தானமாக வழங்க வேண்டும். மாலை நவகிரக சன்னதிகோ  அல்லது சூரிய பகவான் கோவிலுக்கோ சென்று சிவப்பு வஸ்திரம் வைத்து பூஜையை நிறைவு செய்யலாம்.

பிப்ரவரி  16, 2024 அன்று 4.53- 6.30க்குள்  குளித்து விடவும்.
மறுநாள் காலையில் புனித தீர்த்தங்களில் நீராடுவது அல்லது வீட்டிலேயே கல் உப்பு மற்றும் மஞ்சத்தூளை கலந்து குளித்து விடவும். ரதசப்தமிக்கி அடுத்த நாள் பிஷ்மாஷ்டமி எனவும் கூறுவர். இவ்வாறு செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும்.

ரதசப்தமி யின் பலன்கள்

அகால மரணங்கள் ஏற்படாது. நாம் செய்த கர்ம வினைகள் நீங்கும்.

இந்த இயற்கையில்  சாஸ்திரம், சம்பிரதாயங்கள், சாங்கியங்கள் இவைகளால் பின்னி பிணைந்தது தான் நம் பண்பாடு, நம் நாட்டில் வழி  வழியாய் பின்பற்றிய சில விஷயங்கள் மறைந்து விட்டன மறந்தும் விட்டன. ஆகவே இந்த ரதசப்தமியை அனைவரும் கொண்டாடி நம் வினைகளை தீர்த்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்