கோவிலின் முதல் படிக்கட்டில் கால் வைக்கலாமா? கூடாதா? இதோ அதற்கான தீர்வு.!

temple 3

Devotion-கோவிலின் நுழைவாயிலின் முதல் படிக்கட்டில் கால்  வைக்கலாமா என்ற சந்தேகத்தைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

கோவிலுக்கு செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை:

நம்மில் ஒரு சிலர் கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலின் படிக்கட்டுகளை ஏறி மிதித்து செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோ அது எவ்வளவு பெரிய படி கட்டாக இருந்தாலும் தாண்டி தான் செய்வார்கள் இதில் எது சரியானது என்று கேள்வி இருக்கும்.

முதலில் அங்குள்ள புனித நீரில் பாதங்களை நினைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அங்குள்ள கோபுரத்தையும் ,கோபுர கலசத்தையும் பார்த்து வணங்கிகொண்டு , நுழைவாயிலில் இருக்கும் துவார பாலகர்களை வழிபட வேண்டும்.

சாஸ்திரம் கூறுவது என்ன ?

சாஸ்திரத்தின் படி எவ்வளவு பெரிய படிக்கட்டுகளாக இருந்தாலும் அதைத் தாண்டி தான் செல்ல வேண்டும் என கூறுகிறது நம் பெரியோர்களும் அதை தான் சொல்கிறார்கள் .

ஏனென்றால் தாண்டி செல்லும்போது நம் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள்,மனதில் உள்ள  கவலைகள், கெட்ட விஷயங்கள் போன்றவற்றை அங்கேயே விட்டு விட்டு கோவிலுக்குள் சாதாரண மனிதனாக தெளிவான நீரோடை போல செல்வதாக அர்த்தமாகும்.

அதேசமயம் படிக்கட்டுகளில் மீது ஏறி சென்றாள் நம் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை சுமந்து கொண்டு செல்வதாக அர்த்தம்.

கடவுள் வசிக்கும் இடமானது  நாள் முழுவதும் மந்திரங்களாலும் ,நாதஸ்வரம், கெட்டி மேளம் போன்ற மங்களகரமான இசையால்  நிறைந்த முழுமையான நேர்மறை அதிர்வுகள் நிரம்பி இருக்கும். அதனால் நுழைவாயிலின் படிக்கட்டுகளை தாண்டி செல்வதுதான் முறை என சாஸ்திரம் கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்