கர்ப்ப காலத்தில் ஆலயங்களுக்கு செல்லலாமா? கூடாதா? இதோ அதற்கான தீர்வு..!

temple,pregnancy

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிக மகிழ்ச்சியான உன்னதமான காலம் எனலாம். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று எத்தனை மாதங்கள் வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும்  பெரியவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது என கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்..

பெரியவர்கள் ஏன் கர்ப்ப காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார்கள் தெரியுமா?

முற்காலத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரமும் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகள் கல்லும் குண்டும் குழியுமாக காணப்படும், வாகன வசதிகளும் இருக்காது. அதுமட்டுமல்லாமல் கோவில்கள் குன்றுகளிலும் மலை மீதிலும் இருக்கும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் நடந்தால் அவர்களுக்கு உடல் அசதி ஏற்படும். அது மட்டுமல்லாமல் மலை மீது ஏறினால் கவன சிதறல்கள் காரணமாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அவ்வாறு கூறினார்கள்.

மேலும் கோவில்களிலும் , திருவிழாக்களிலும் கூட்டங்கள் அதிகமாக காணப்படும் இந்த சூழ்நிலையில் ஏதேனும் அசம்பாவிதத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது கூறினார்கள்.. ஆகவே  அக்கால வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு கூறினார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலைகள் அவ்வாறு இல்லை தேவையான வாகன வசதி உள்ளது, அதனால் கோவிலுக்கு செல்லலாம் . பிரசவத்திற்கு முதல் நாள் வரை கூட சென்று வரலாம். ஆனால் கூட்டம் இல்லாத கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டிய கோவில்கள்:  

மலை மீது ஏறுவதை தவிர்க்க வேண்டும்.  படிக்கட்டு அதிகமான கோவில்கள் , சில பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லக்கூடாது ஏனென்றால் அங்குள்ள சுவாமி சிலைக்கு கிழ்  அல்லது பக்கத்திலோ எந்திரங்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள் அந்த எந்திரம் அதிக ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் இதனால் அங்கு கூட்டமும் அதிகமாக இருக்கும் மேலும் அந்த எந்திரத்தின் சக்தியை குழந்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இருக்காது. இதனாலும் சிலர் கூறுவார்கள்.

ஆகவே கூட்டம் இல்லாத அமைதியான பக்கத்தில் உள்ள சிறு கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பெட்ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருப்பார்கள், அவ்வாறு உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து செயல்படவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்