அசைவம் சாப்பிட்டு வழிபாடு செய்யலாமா ?..இதோ அதற்கான தீர்வு .!

temple

நம்மில் பலருக்கும் தோன்றும் சந்தேகங்களில் ஒன்று அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜை செய்யலாமா …விளக்கு ஏற்றலாமா மற்றும் கவசங்கள் பதிகங்கள் போன்றவற்றை படிக்கலாமா என சந்தேகம் ஏற்படும் அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்.

பொதுவாக அசைவம் சாப்பிடுவது அவரவர் மன ஓட்டத்தை பொருத்து தான். ஆனால் இந்த உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்று பல ஞானிகள் நல்ல விஷயங்களை சொல்லி சென்றுள்ளனர், இப்படி ஞானப் பெரியவர்கள் நமக்கு சைவப் பாதையை காட்டியதற்கு நோக்கம் என்னவென்றால் நாம் நலமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். ஏன் வள்ளுவர் கூட திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே எழுதி வைத்துள்ளார் அதைப் படித்துப் பார்த்தோமேயானால் இன்னொரு உயிரைக் கொன்று நம் உயிரை( உடலை )வளர்க்க வேண்டுமா என்ற கேள்வி நமக்குள்ளே தோன்றும். பொதுவாக ஒரு கோழியோ அல்லது ஆடோ அதற்கும் குழந்தைகள் இருக்கும். கொஞ்ச நேரம் நம்மை காணாவிட்டாலும் அல்லது நாம் அம்மாவை காணாவிட்டாலோ நாம் சும்மா இருப்போமா தவித்துப் போய் விடுவோம் அல்லவா.. நம் அங்கம் நடுங்கி கண்கள் குளமாகிவிடும். அதுபோல்தான் அந்த ஜீவராசிகளுக்கும் பதைப்பதைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அவரவர் கையில் கொன்றுதான் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்து விட்டால் பலரும் அதை சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள்

நடமாடும் சுடுகாடாகும் மனிதன் 

ஒரு மனிதன் நடமாடும் மனிதர்களாக வாழ வேண்டும் அந்த நிலையில் இருந்து உயர்ந்து நடமாடும் தெய்வமாக கூட இருக்கலாம், ஆனால் நடமாடும் சுடுகாடாக நாம் மாறிவிடக் கூடாது ,என்ன இப்படி சொல்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா.. ஆம், ஒரு உடலை புதைக்கும் இடத்திற்கு சுடுகாடு என்றுதானே கூறுவோம் அப்படி ஆட்டையோ கோழியவோ வயிற்றில் சமாதி பண்ணினால் அதற்கு பெயர் சுடுகாடு தானே நடமாடும் மனிதர்களாக இருக்கும் நாம் நடமாடும் சுடுகாடாக மாறிவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

ஒரு ஆட்டை அறுக்கும் போது ஒருவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் அவர் சைவம் என்று தெரிந்து கொள்ளலாம் இதுவே அவர் நாவில் இருந்து நீர் வந்தால் அவர் அசைவர் என தெரிந்து கொள்ளலாம் என்று வள்ளலாரை கூறியுள்ளார். சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் இருக்கும் போது நாம் ஏன் ஒரு உயிரை கொன்று தீங்கு செய்ய வேண்டும்.

ருத்ராட்சம் அணிந்திருந்தால் அசைவம் சாப்பிடலாமா? கூடாதா?

ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும். சில பெண்களுக்கு தோன்றும் நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம் ஆனால் சமைப்போம்..  சமைத்தாலும் ருத்ராட்சம் அணியக்கூடாது .ஒருவேளை அணிய வேண்டும் என்று இருந்தால் பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

அசைவம் சாப்பிட்ட பிறகு விளக்கு ஏற்றி பூஜை செய்யலாமா?

நம் அசைவம் சாப்பிட்டுவிட்டு விளக்குகளை ஏற்றக் கூடாது அதற்கு மாறாக விடியற்காலையிலேயே நாம் விளக்கு ஏற்றிவிட்டு பிறகு அசைவம் எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் வீட்டை சுத்தம் செய்துவிட்டு தான் மறுநாள் விளக்கு ஏற்ற வேண்டும்.கவசம் பதிகங்கள் படிக்க கூடாது .

ஆகவே   நம் இறைவழிபாட்டிற்கு முன் அசைவங்களை தவிர்ப்பதே சிறந்ததாகும் . இறைவழிபாட்டிற்கு என்று  சில கட்டுப்பாடு  உள்ளது அதை நாம் இன்றும் பின்பற்றினால் நல்ல பலன்களை அடையலாம்…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்