மந்திரங்களை உச்சரிப்பதால் மாற்றங்கள் நிகழுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

mantra

Mantra –மந்திரங்களை கூறுவதன் மூலம் நமக்குள் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.

நம்முடைய உடலானது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானபூர்வமான உண்மை. ஒலி  என்ற சத்தம் நமக்கு மகிழ்ச்சியையும் தரும் பயத்தையும் தரும். உதாரணமாக நாம் அமைதியாக இருக்கும்போது இன்னிசை கேட்போம், அப்போது அது மகிழ்ச்சியை தரும் .ஆனால் திடீரென்று ஏதேனும் வெடிப்பது போல் சத்தம் கேட்டால் அது பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும்.

இப்படி ஒலிக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.  ஒலிக்கும் நம் உடலுக்கும் சம்பந்தம் உண்டு. மருத்துவத்தில் ஒலி  அதிர்வு சிகிச்சை என்ற ஒரு  சிகிச்சையே உள்ளது. நாம் பேசும்போதும் அப்படித்தான் சில வார்த்தைகள் நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதுபோல் மந்திரச் சொற்களும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் அகார  ஒகார  இதிலிருந்து பிறக்கக் கூடியது தான் மந்திரங்கள். உதாரணமாக ஓம் என்று உச்சரிக்கும் போது அந்த சத்தமானது நம் காது வலியாக சென்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி எங்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்து நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கந்த சஷ்டி கவசத்தில் ஒரு சில வரிகள் உள்ளது ர ர ர ர ர ர ர ரி ரி ரி.. இந்த வார்த்தை எழுத தெரியாமல் இல்லை இந்த சத்தத்திற்கு  என்று ஒரு சக்தி உள்ளது. அது நம் மூளைக்குள் சென்று மாற்றத்தை ஏற்படுத்தும் .இதனால் தான் சக்தி வாய்ந்த மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஏனென்றால் உச்சரிப்பு மாறுபட்டால் அதன் பலனும் மாறுபடும். பயம் இருந்தால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கச் சொல்வார்கள் அதை  படிக்கும்போது அந்த வார்த்தைகள் நமக்குள் சென்று தைரியத்தை ஏற்படுத்தும் .இது உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

மேலும் மந்திரங்கள் உடலுக்கு உஷ்ணத்தை தரும் ,ஆத்ம சக்தியை அதிகப்படுத்தி சரியான இயக்கத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும். நாம் சோர்வுற்று இருக்கும்போது சில தன்னம்பிக்கையான வார்த்தைகளை கேட்கும் போதும் பார்க்கும் போதும் நமக்குள் ஒரு தைரியமும் மாற்றமும் நிகழ்கிறது தானே..

அப்படிப்பட்ட சாதாரண வார்த்தைகளுக்கே சக்தி  இருக்கும்போது கடவுளின் மந்திரங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். ஆன்மீகமும் கடவுள் நம்பிக்கையும் வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அதை உணர்வு பூர்வமாக மட்டுமே உணர முடியும். அதை உணர்ந்தவர்கள் அதன் பலனை பெற்றிருப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்