தமிழ் வருடப்பிறப்பு செல்வச்செழிப்பை தர இந்த 5 பொருட்களை இன்று வாங்குங்கள்.
இன்று சித்திரை மாதம் முதல் நாள்(14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக மிக விஷேசமான தினத்தில் தமிழ்வருடப்பிறப்பு நிகழ்ந்துள்ளது. இன்றைய நாளில் பிரதோஷம் இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் முக்கிய தினங்களில் ஒன்றான பிரதோஷம் இன்று. அதுவும் வியாழக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் இன்றைய தினத்தில் நடைபெறுகிறது.
இதுவும் இந்த வருடப்பிறப்பான முதல் நாளில் நிகழ்வது கூடுதல் சிறப்பு என்றே கூறலாம். ஒரு நாளின் தொடக்கம் அல்லது ஒரு புதிய விஷயத்தின் தொடக்கம் நன்றாக அமைய நாம் கடவுளுக்கு பூஜை செய்வது வழக்கம். அதுபோல் ஒரு புதுவருடம் இன்று பிறந்துள்ளது. இந்த வருடம் சிறப்பானதாக அமைய நாம் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று கடவுளை பிரார்த்திப்பது. மேலும், முதல் நாள் நன்மை அளிக்கும் விதமாக அமைந்தால் இவ்வருடம் முழுவதும் அனைத்திலும் நன்மையே நடக்கும் என்பதால் இன்று நாம் நம் வாழ்வில் செல்வச்செழிப்போடு இருக்க என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் வீட்டை சுத்தமாக கழுவி துடைக்க வேண்டும். பின்னர் உங்கள் வீட்டில் உள்ள கடவுள் சிலை மற்றும் படங்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். அனைத்து பூஜை சாமான்களுக்கும் புதிதாக மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் பூ வைத்து பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இன்று முதலில் வாங்க வேண்டிய பொருள் மகாலக்ஷ்மி வாசம் செய்ய கூடிய பொருளான கல் உப்பு. உப்பு வீட்டில் நிறைவாக இருப்பது பணவரவு நிறைவாக இருக்க உதவும்.
அடுத்ததாக உங்கள் புதுவருடம் இனிமையானதாக அமைய வெல்லம் வாங்க வேண்டும். அல்லது நாட்டுச்சர்க்கரை/பனங்கற்கண்டு வாங்கலாம்.மூன்றாவதாக மஞ்சள் வாங்க வேண்டும். நான்காவதாக கனிகளில் சிறப்பு வாய்ந்த எலுமிச்சை கனியை வாங்கிக்கொள்ளுங்கள். ஐந்தாவதாக பச்சரிசியை வாங்க வேண்டும். இந்த 5 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் வாங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு மேம்படும். இந்த 5 பொருட்களுடன் கடவுளுக்கு பழங்கள் வைத்து பூஜை செய்வது உங்கள் வருடமும் உங்கள் வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…