உங்கள் தலையெழுத்தை மாற்றும் பிரம்மா கோவில்..!
பிரம்மபூரிஸ்வரர் கோவில் -பொதுவாக நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்துமே நம் தலைவிதிபடி தான் நடக்கும் என கூறுவார்கள் .அப்படி நம் தலையெழுத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பிரம்மா கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கோவில் அமைத்துள்ள இடம் :
படைக்கும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் தனி சன்னதி அமைக்கப்பட்டு கோவில் இருக்கும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் என்ற ஊரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது. இங்குதான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம் காலை 7:00 – 12 மாலை 4 -8 மணி வரை திறந்திருக்கும். இங்கு பிரம்மன் வழிபட்டதால் சிவனை பிரம்மபுரீஸ்வரர் என்றும் அம்பாளை பிரம்ம நாயகி என்றும் கூறுவர். பிரம்மா பிரபாண்டமாக மஞ்சள் காப்புடன் தனி சன்னதியில் அமைந்து காட்சி தருகிறார்.
இங்கு திருவாதிரை, புனர்பூசம், சதயம் போன்ற நட்சத்திரத்தன்று செல்வது நல்ல பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது ,அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வழிபடலாம். வியாழக்கிழமைகளில் செல்வது மிகச் சிறப்பாகும்.
வழிபடும் முறை:
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் முன்பே காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று பிறகுதான் பிரம்மா கோவிலுக்கு செல்ல வேண்டும்.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றதும் முதலில் ஈசனை வழிபட்டு பிறகு பிரம்மாவை வழிபடவும் ஏனென்றால் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். நம் ஜாதகத்தை எடுத்துச் சென்றாள் பிரம்மாவின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள்.
பிரம்மாவிற்கு பூஜைக்கு மஞ்சள் வாங்கி கொடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது.அதன் பிறகு பதஞ்சலி முனிவரின் மணிமண்டபத்திற்குச் சென்று தியானம் செய்யவும், பிறகு அம்பாளை தரிசிக்கவும் ,கடைசியாக ஆயுளை மாற்றும் சக்தி கொண்ட வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கும் சென்று வழிபடவும்.
பிரம்மன் படைக்கும் தொழிலை கொண்டுள்ளதால் இங்கு குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் வந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும் .ஆகவே உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்கள் வாழ்க்கையை சிறப்புரச் செய்ய இந்தப் பிரம்மா ஆலயத்தை தரிசித்துச் செல்லுங்கள்.