ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைய நாம் செய்யவேண்டியவை
ஒவ்வொருவருக்கும் தான் கடக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமையவேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆதாலால் தான் ஒவ்வொரு நாளும் யார் முகத்தில் முழிக்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகின்றோம்.
நல்லநாளாக அமையவில்லை எனில் இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேனோ என குறை கூறுவோம்.
தினமும் நாம் கண் விழிக்கும் போது நம் உள்ளங்கையில் விழிக்க வேண்டும். உள்ளங்கையில் மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மகாசக்தி ஆகியோர் குடியிருந்து அருள்புரிகின்றனர். ஆதலால் தினமும் நம் உள்ளங்கையில் கண்விழித்து அன்றைய நாளை தொடங்கினால் எல்லா நல்ல காரியமும் கிட்டும்.