வாழ்வில் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை வழிபாடு ..!

Published by
K Palaniammal

வெற்றிலை மாலை  -எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகத்துவம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலரும் ஒரு காரியத்தை நினைத்து அது நடக்காமல் போயிருக்கும் அல்லது தடங்கலாய் கொண்டே இருக்கும் அப்படி இருப்பவர்கள் இந்த வெற்றிலை மாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெற்றிலை மாலையும் ஆஞ்சநேயரும்:

ஆஞ்சிநேயருக்கு வடை மாலை எவ்வளவு சிறப்புடையதோ அந்த அளவிற்கு வெற்றிலை மாலை  மிக சிறப்பாக கூறப்படுகிறது .ஆஞ்சநேயர் ராம நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.

ராமாயணத்தில் சீதாவும் ராமரும் பிரிந்திருந்த போது அனுமன் சீதாவிடம் ராமரை பார்த்த செய்தியை கூறியதும் சீதா மகிழ்ச்சி அடைகிறார், இந்த மகிழ்ச்சி செய்தியை கூறியதால் அனுமனுக்கு அப்போது அங்கு கிடைத்த வெற்றிலையை பரிசாக  கொடுத்தார். அனுமனும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சிறப்பாக கூறப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் எண்ணிக்கை

பொதுவாக ஆஞ்சநேயர் கோவில் சென்றால் 11 முறை வலம் வருவது சிறப்பாகும். அதுபோல் வெற்றிலையின் எண்ணிக்கை 11, 21, 27, 54, 108 இப்படி உங்கள் வசதி வாய்ப்பிற்கு தகுந்தாற்போல் மாலையை செய்து ஆஞ்சநேயருக்கு சாத்தலாம். சனி, செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் இந்த வழிபாடு மேற்கொள்ளலாம். குறிப்பாக அம்மாவாசை, பௌர்ணமி திதிகளில் செய்வது மிக மிக சிறந்த பலனை கொடுக்கும்.

பலன்கள்:

வெற்றிலை மாலை வழிபாடு செய்வதன் மூலம் எடுத்த காரியத்தில் விரைவில் வெற்றி கிடைக்கும், காரிய தடைகள் அகலும் ,திருமண தடை நீங்கும்.

ஆகவே வெற்றிலை என்ற பெயரில் இருக்கும் வெற்றி உங்கள் வாழ்விலும் கிடைக்க வெற்றிலை மாலை வழிபாடு செய்யுங்கள்.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago