வாழ்வில் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை வழிபாடு ..!
வெற்றிலை மாலை -எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகத்துவம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பலரும் ஒரு காரியத்தை நினைத்து அது நடக்காமல் போயிருக்கும் அல்லது தடங்கலாய் கொண்டே இருக்கும் அப்படி இருப்பவர்கள் இந்த வெற்றிலை மாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெற்றிலை மாலையும் ஆஞ்சநேயரும்:
ஆஞ்சிநேயருக்கு வடை மாலை எவ்வளவு சிறப்புடையதோ அந்த அளவிற்கு வெற்றிலை மாலை மிக சிறப்பாக கூறப்படுகிறது .ஆஞ்சநேயர் ராம நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.
ராமாயணத்தில் சீதாவும் ராமரும் பிரிந்திருந்த போது அனுமன் சீதாவிடம் ராமரை பார்த்த செய்தியை கூறியதும் சீதா மகிழ்ச்சி அடைகிறார், இந்த மகிழ்ச்சி செய்தியை கூறியதால் அனுமனுக்கு அப்போது அங்கு கிடைத்த வெற்றிலையை பரிசாக கொடுத்தார். அனுமனும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சிறப்பாக கூறப்படுகிறது.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் எண்ணிக்கை
பொதுவாக ஆஞ்சநேயர் கோவில் சென்றால் 11 முறை வலம் வருவது சிறப்பாகும். அதுபோல் வெற்றிலையின் எண்ணிக்கை 11, 21, 27, 54, 108 இப்படி உங்கள் வசதி வாய்ப்பிற்கு தகுந்தாற்போல் மாலையை செய்து ஆஞ்சநேயருக்கு சாத்தலாம். சனி, செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் இந்த வழிபாடு மேற்கொள்ளலாம். குறிப்பாக அம்மாவாசை, பௌர்ணமி திதிகளில் செய்வது மிக மிக சிறந்த பலனை கொடுக்கும்.
பலன்கள்:
வெற்றிலை மாலை வழிபாடு செய்வதன் மூலம் எடுத்த காரியத்தில் விரைவில் வெற்றி கிடைக்கும், காரிய தடைகள் அகலும் ,திருமண தடை நீங்கும்.
ஆகவே வெற்றிலை என்ற பெயரில் இருக்கும் வெற்றி உங்கள் வாழ்விலும் கிடைக்க வெற்றிலை மாலை வழிபாடு செய்யுங்கள்.