குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!
டையை தானமாக கொடுத்தால் வருண உலகத்தில் நமது ஆன்மா ஆயிரம் ஆண்டுகள் வாழும் என கருட புராணம் கூறுகிறது.
சென்னை –குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குடை தானத்தின் பலன்கள் ;
நாம் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருள்கள் வெயில் காலத்தில் பயன்படும் , சில பொருட்கள் மழைக்காலத்திற்கு உதவும் .ஆனால் குடை இந்த இரண்டு பருவ காலத்திற்கும் பயன்படக்கூடியது. ஜோதிட ரீதியாக குடையை தானமாக கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது. குடையை தானமாக கொடுத்தால் வருண உலகத்தில் நமது ஆன்மா ஆயிரம் ஆண்டுகள் வாழும் என கருட புராணம் கூறுகிறது.
மேலோகத்தில் மட்டும் அல்லாமல் நாம் வாழும் இந்த பூலோகத்திலும் பல நன்மைகள் கிடைக்கும் .குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையும் ,மேலும் சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும், தவறான வழியில் சேர்த்த செல்வத்தால் ஏற்படும் பாவம் விலகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நவீன காலத்திற்கு ஏற்ப குடைக்கு பதில் ரெயின் கோட் போன்றவற்றையும் தானமாக கொடுக்கலாம்.இதுவும் குடைதானம் கொடுத்த பலனை பெற்றுத் தரும்.
குடை தானம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ;
குடைதானம் அனைவருமே கொடுக்கலாம் என்றாலும் சில குறிப்பிட்ட ராசியினர் கொடுக்கும் போது அதீத பலனை பெற்று தரும். மேஷ ராசி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் குடைதானம் கொடுப்பது சிறந்ததாக கூறப்படுகிறது .
இப்படி தானம் தர்மம் செய்வதால் செலவு தான் அதிகமாகும் என பலரும் நினைப்பதுண்டு. இவ்வுலகில் வாழ நமக்கு பணம் தேவை தான். ஆனால் என்றாவது ஒருநாள் நிச்சயம் நம்மை மரணம் அழைக்கும் அதன் பிறகு நாம் செய்த பாவம் புண்ணியம் தான் பேசும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. நாம் வாழும் போது தான் புண்ணியத்தை சேர்க்க முடியும்.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு மடங்காவது தான தர்மம் செய்ய வேண்டும். அதாவது நூறு ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அதில் பத்து ரூபாயாவது மற்றவருக்கு தானம் கொடுக்க வேண்டும். இது உங்களுக்கு இரட்டிப்பான பணத்தை திரும்ப கொடுக்கும். மேலும் பல்வேறு பாவங்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்திருப்போம் இப்படி நமது ஊழ்வினையை மாற்ற தானங்கள் செய்வது தான் சிறந்தது. நாம் செய்யும் தான தர்மம் ஆபத்தான கட்டத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி கொண்டது என சாஸ்திரம் கூறுகின்றது.