ஆடை தானம் செய்வதால் இவ்வளவு நன்மை இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
ஒரு மனிதனுக்கு உயிர் பெரிதா மானம் பெரிதா என்ற கேள்வி வந்து விட்டால் மானம்தான் பெரிது என அனைவரும் கூறுவோம், ஏன் வள்ளுவர் கூட ஒரு குரலில் உயிரை விட மானம்தான் பெரிது எனவும் மானம் போன பிறகு வாழ்வது உயிரற்ற உடலுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார், எனவே உயிரை விட மானத்தைக் காக்கக்கூடியது இந்த ஆடைதான் ஆடை என்பது ஆடம்பரமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்ப்பதற்கு அழகாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும் .
முந்தைய காலகட்டத்தில் ஆடை வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை எடுத்துக் கொண்டோம் அதாவது தீபாவளி, பொங்கல் ,பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் எடுப்போம். அதனால் ஆடை மீது ஒரு மதிப்பு மரியாதை அதைப் பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். தற்போது அது மாறிவிட்டது எனலாம்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…
ஆனால் இன்றும் பல பேருக்கு புத்தாடை என்பது ஒரு கனவாக தான் உள்ளது. ஒரு முறை கிடைக்குமா என்பதே ஏக்கமாக இருக்கும் குழந்தைகளும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஆடையை தானமாக கொடுக்கும்போது முதலில் அவர்களுக்கு அது மகிழ்ச்சியை கொடுக்கும் பழம் பலன் என்பது இரண்டாம் பட்சம்தான்.
ஆடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
- கன்னி தோஷம் என்ற தோஷம் நீங்கும்.
- வாழ வேண்டிய வயதில் மரணம் ஏற்பட்டால் அது கேட்பவர்களுக்கு கூட வருத்தத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரி இளம் வயதில் மரணம் நிகழாமல் இருக்கும், அது மட்டுமில்லாமல் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
- எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பது மாறி தொட்ட காரியம் வெற்றி அடையும் இதற்கு இந்த ஆடை தானம் துணை செய்யும்.
- பழைய ஆடைகளை கொடுக்கும்போது கிழிந்து மிகவும் பயன்படுத்த முடியாதவற்றை கொடுக்கக் கூடாது. ஓரளவு பயன்படுத்துமாறு இருந்தால் தானமாக கொடுக்கலாம். முடிந்தவரை பழைய ஆடைகளை கொடுப்பதை தவிர்க்கலாம்.
- எனவே தீபாவளி பொங்கல் என ஏதேனும் ஒரு பண்டிகையில் ஏழை குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு புத்தாடைகளை கொடுத்து அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்ச்சியடைந்து வாழ்வோம்.