இந்த திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… !சூப்பரா இருக்கும்…

Karthigai Deepam 2023

கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்திரு கார்த்திகை சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் மற்றும்  பௌர்ணமி நட்சத்திரத்துடன் இணையும்போது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் வீடுகளில் எப்போது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், விரத முறை ,தீபம் ஏற்றும் திசையும், பலன்களும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதா.? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

திருவண்ணாமலையில் மலை மேல் தீபம் ஏற்றிய  பிறகுதான் அனைவரது இல்லங்களிலும் ஏற்ற வேண்டும். தமிழகத்தில் கோவில்கள்,வீடுகள் கடைகள் மலைகள், குளங்கள் என பல்வேறு இடங்களில் கார்த்திகை தீபங்களால் அலங்கரிக்கப்படும்.

விரத முறை

அன்றைய தினம் அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம். அன்று மாலை ஆலயம் சென்று விளக்கு ஏற்றிய பின் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி பூஜை முடித்த பின் தான் விரதத்தை முடிக்க வேண்டும்.

இல்லங்களில் தீபம் ஏற்றும் முறை

தீபங்கள் அக்னி லிங்கத்தின் சிறிய பிரதிகள் என நம்பப்படுகிறது. மூன்று நாட்கள் தீபம் ஏற்றப்பட வேண்டும், பரணி நட்சத்திரம் அன்றும், திருக்கார்த்திகை அன்றும் அடுத்த நாள் அன்றும் ஏற்றப்பட வேண்டும். மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான் ஏற்ற வேண்டும் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய்யால் விளக்குகளை ஏற்றலாம், பூஜை அறையில் மாவிளக்கில் விளக்கேற்றுவது சிறந்தது. திரிகள் நூல் திரி அல்லது பஞ்சு திரி பயன்படுத்தலாம். விளக்குகளை வாழை இலை அரச இலை அல்லது ஒரு தட்டின் மீது வைத்து தான் ஏற்ற வேண்டும் கீழே வைக்கக் கூடாது. முதலில் வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு பிறகு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். ஏனெனில் வெளியில் இருந்து மகாலட்சுமியை நம் வீட்டுக்குள் வரவழைப்பது என நம்பப்படுகிறது.

அன்று குறைந்தபட்சம்27 தீபங்கள் ஆவது ஏற்ற வேண்டும். வீட்டின் வாசலில் லட்சுமியின் அம்சமாக குத்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.

குத்துவிளக்கில் ஏற்றப்படும் தீபத்தின் பலன்கள் 

குத்துவிளக்கில் ஒரு  முகம் ஏற்றினால் நினைத்த செயல் நடக்கும். இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகத்தில் விளக்கு ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகத்தில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும்.
ஐந்து முகத்தில் விளக்கு ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

வீடுகளில் தீபம் ஏற்றும் திசையும் பலன்களும்

நம் ஏற்றப்படும் விளக்குகள் எந்த முகத்தை நோக்கி இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், விளக்கை கிழக்கு முகம் நோக்கி ஏற்றினால் கஷ்டம் தீரும். மேற்கு முகம் நோக்கி தீபம் ஏற்றினால் கடன் நீங்கும் எனவும் வடக்கு முகம் நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடை அகலும் எனவும் கூறப்படுகிறது. எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. அது இறந்தவர்களுக்காக ஏற்றும் திசையாக கருதப்படுகிறது .

இத்தனை சிறப்பு வாய்ந்த திரு கார்த்திகை நன்னாளில் விளக்கு ஏற்றி வாழ்வில் சகல வளத்தையும் பெற்று வாழ்வில் நல்லவைகள் அனைத்தும் தீப ஒளி போல் பிரகாசிக்கட்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Imran khan
IPL 2025 - Rohit sharma
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan