பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இதெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாதது என்னவெல்லாம் தெரியுமா?

Seervarisai

ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது பலவகை சீர்வரிசைகளை எடுத்துச் சென்றாலும் சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் அது என்னவென்றும்,  காரணம் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

அன்றிலிருந்து இன்று வரை ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சீர்வரிசை எடுத்துச் சென்றால் தான் அந்தப் பெண் மதிக்கப்படுகிறாள். ஆனால் ஒரு பெண் எடுத்துக் கொண்டு வருவது நல்ல குணம், பழக்கவழக்கங்கள், ஒரு குடும்பத்தை எவ்வாறு வழி நடத்துவது என்ற திறன் இதுபோன்ற திறமைகளை தான் கொண்டு வர வேண்டும் இதுவே மிகச் சிறந்த சீர்வரிசையாகும் ஆனால் இவற்றை தாண்டி நம் கண்கள் பொருட்கள் மீது தான் உள்ளது குண நலங்களில் பெரிதாக கவனம் செல்வதில்லை என்பதே உண்மை.

பிறந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல கூடாத பொருட்கள்

பிறந்த வீட்டில் பயன்படுத்திய விளக்கு,  பூஜையறை படங்கள் ,விக்கிரகங்கள் போன்றவற்றையும் எடுத்துச் செல்லக்கூடாது. முருங்கைக்காய் முருங்கை கீரை, அகத்திக்கீரை போன்ற கீரை சம்பந்தப்பட்ட எந்த பொருள்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.

ஆடை தானம் செய்வதால் இவ்வளவு நன்மை இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

வெட்டக்கூடிய பொருட்களான அருவாள் மனை, கத்தி ,கத்திரிக்கோல் போன்றவற்றையும்  எடுத்துச் செல்லக்கூடாது. அது மட்டுமல்லாமல் துடைப்பம் முறம், கசப்பு தன்மை வாய்ந்த பாகற்காய்  கோவக்காய் போன்றவைகளும், பயன்படுத்திய இரும்பு பாத்திரங்கள் கொண்டு செல்லக்கூடாது.

ஏன் எடுத்துச் செல்லக்கூடாது தெரியுமா?

இந்த பொருள்களை எடுத்துச் சென்றால் இரு வீட்டின்  உறவு பாதிக்கப்படும்.
வெட்டுகின்ற பொருள்களை எடுத்துச் சென்றால் அந்த உறவு வெட்டுப்படும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஒருவேளை நாம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கு உண்டான பணத்தை கொடுத்து விட்டு எடுத்துச் செல்லலாம். அப்போது தான் இரு வீட்டின் பந்தம் நிலைக்கும். ஆனால் முடிந்தவரை தவிர்ப்பதே சிறந்தது. எண்ணெய்,  உப்பு போன்றவற்றை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது.சில விஷயங்களை பெரியவர்கள் சொன்னால் கடைப்பிடிப்பது சிறந்தது.

ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடும் புகுந்த வீடும் இரு கண்கள் எனலாம், இவற்றை பாதுகாப்பது அப்ப பெண்ணின் கடமையாகும். இவ்விரு வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் மகிழ்ச்சியையும் பேணி காப்பதற்கு ஒரு பெண் போராட வேண்டியது நிதர்சனமான உண்மையாகும். அந்தப் போராட்டத்தில் இந்தப் போராட்டத்தை எதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகவே இவற்றை எடுத்துச் செல்வதை தவிர்த்து விட்டு மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்