நடிகர் ரஜினிகாந்த் இமாச்சலப் பிரதேசத்தில் பைஜ்நாத் கோயிலில் வழிபாடு!
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்ற அவர், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர், இமயமலை சென்று நீண்டநாளாகிவிட்டதால், தற்போது அங்கு செல்வதாக தெரிவித்தார்.
பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் இமயமலையில் தங்கியிருக்க உள்ளதாக கூறினார்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் பைஜ்நாத் (Baijnath) என்ற இடத்தில் உள்ள பழமையான பைஜ்நாத் சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.