ஆடி அமாவாசை 2024 இல் எப்போது?

Aadi amavasai 2024

ஆடி அமாவாசை 2024 –ஆடி அமாவாசை என்று தொடங்குகிறது என்றும் என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஆடி அமாவாசை சிறப்புகள் ;

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளை அமாவாசை ஆகும். சந்திரன் தேய்பிறையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நோக்கி செல்லும் நாள். அமாவாசை என்பது பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது .

தாட்சாயன புண்ணிய காலம் ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலமாகும் .இந்த தாட்சாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அம்மாவாசை சிறந்த நாளாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வருடத்தில் மூன்று அமாவாசை தினங்கள் சிறப்பான நாளாக கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகும். இந்த ஆடி அமாவாசை காலத்தில் பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் புறப்படும் நாளாக கூறப்படுகிறது .எனவே அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் பூமிக்கு அவர்களை வரும்படி அழைப்பு விடுப்பதற்காக தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாத்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசை எப்போது?

ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி மாலை 3. 51 மணிக்கு  அம்மாவாசை திதி துவங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை  4 .43 மணிக்கு முடிவடைகிறது இதன்படி ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்;

ஆடி அமாவாசை அன்று தாய் தந்தையை இழந்த ஆண்கள் மட்டுமே விரதம் கடைபிடித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பெண்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. புனித தீர்த்தங்களில் நீராடியும் தர்ப்பணம் கொடுப்பது மிக சிறப்பாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 – 12 மணி வரைக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம் .மதியம் 1:30க்கு மேல் முன்னோர்களுக்கு படையல் இட்டுக் கொள்ளலாம். முடியாதவர்கள் அந்நாளில் குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி எள்ளும் தண்ணீரும் இறைத்தாவது முன்னோர்களை வரவேற்க வேண்டும்.

சுமங்கலி பெண்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது. அந்த வீட்டில் உள்ள ஆண்கள் இந்த முறையை செய்யலாம். பிறகு தானம்  தர்மம் செய்ய வேண்டும். இதுவும் செய்ய முடியாதவர்கள் கோவிலுக்குச் சென்று முன்னோர்களின் பெயரில் அர்ச்சனை செய்து தான தர்மம் கொடுக்கலாம்.

மேலும் இந்நாளில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும் .செம்மண் அல்லது காவி பொடியில்  தான் கோலம் போட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்நாளில் கடினமான வேலைகளை செய்யக்கூடாது. முடிந்தவரை மௌன விரதம் இருப்பது மிகச்சிறந்ததாகும்.

குலதெய்வ வழிபாடு ,அம்மன் வழிபாடு மேற்கொள்வதற்கு உகந்த நாளாகும். புதிய காரியங்களை இந்நாளில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும் .இந்நாளில் பாகற்காய் சமைத்தால் 100 காய்கறிகளுக்கு சமைத்த பலனை கொடுக்கும். பிரண்டை சமைத்தால் 300 வகை காய்கறி சமைப்பதற்கான பலனை கொடுக்கும் எனவும் பலாக்காய் சமைத்தால் 600 வகை காய்களை சமைத்ததற்கான பலனை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் துவரம் பருப்பை தவிர்த்து பாசிப்பருப்பு கொண்டு சமையல் செய்யலாம்.

பொதுவாகவே அமாவாசை காலங்களில் முன்னோர்கள் வழிபாடு செய்வது சிறப்பாக கூறப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை அன்று செய்யும்போது முன்னோர்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்றும் நீண்ட ஆயுளும் ,எடுத்த காரியத்தில் தடையில்லாமல் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் வரவிருக்கும் ஆடி அமாவாசையை முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து அவர்களின் முழு ஆசியையும் பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்