அடேங்கப்பா.! சிவராத்திரிக்கு இவ்ளோ பெரிய அறிவியல் காரணம் இருக்கா..?

Published by
K Palaniammal

மகா சிவராத்திரி – மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக பிரசித்தி  பெற்றது. நாம் இதை ஆன்மீக வழியில் கடை பிடித்தாலும் இதற்கென்று வியப்பூட்டும் அறிவியல் காரணமும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிவராத்திரியம் நிலவின் தத்துவமும் :

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை வைத்து கணிக்கப்படுகிறது. மனிதனின் மனம் சந்திரனை போல் நிலையில்லாதது நமக்கு எண்ணங்கள் மாறி மாறி வருவதைப் போல் நிலவின் சுழற்சி கணக்கும் மாறி மாறி தான் வரும் அதனால் தான் சந்திரனை மனோகாரகன் என ஜோதிடத்தில் கூறுகின்றனர். அதாவது சந்திரன் மனதையும் நம் எண்ணங்களையும் ஆள்பவர்.

மனநோயாளிகள் அமாவாசை பௌர்ணமி தினங்கள்  ஒட்டி வரும்  நாட்களில் தான் அதிகம் துன்பப்படுகிறார்கள்.. ஏனென்றால் அமாவாசை பௌர்ணமி முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனின் காந்த சக்தியால் அனைத்து ஜீவராசிகளுக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்களின் தாக்கம் தான் துன்பமாக அனுபவிக்கின்றோம்.

நம் முன்னோர்கள் அம்மாவாசை பௌர்ணமி தினங்களை கொண்டாடி வந்தனர், அந்த சமயங்களில் நம் உடல் இயக்கத்தில் நிதானம் கொண்டு வரவும் ,மனவலிமை பெறவும் பல விரதம் மற்றும் பூஜை முறைகளை மேற்கொண்டனர் ஆனால் நாம் இன்று அதை கடைபிடிப்பதில்லை.

மனிதனின் அலைபாயும் மனதை சிவத்தின் மீது வைத்து தியானம் செய்ய வேண்டும் என்பதை சிவராத்திரியின் நோக்கமாகும் .சந்திரன் வளரும் நாள் 15, தேயும் நாள் 15 இதில் தேய்பிறை 14-ஆம் நாள் தான் சிவராத்திரி வரும்.

மகா சிவராத்திரியும் அறிவியல் காரணமும்:

இந்த உலகம் இயங்க ஒரு சக்தி தேவை, அதுதான் ஈத்தர் சக்தி என அறிவியல் கூறுகிறது. இந்த சக்தி சிவராத்திரி நாட்களில் அதிகமாக வரும் அதுவும் மகா சிவராத்திரி அன்று ஈத்தர்  சக்தி மிக அதிகமாக இருக்கும்.

பூமியானது பெரிய நீள் வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட  பாதைக்கு மாறும் நேரத்தில் தான் மகா சிவராத்திரி வரும். பகல் நேரத்திலும் ஈத்தர் சக்தி இருக்கும் ஆனால் இரவு 9 – 2:00am இந்த நேரத்தில் ஈத்தர்  சக்தி அதிகம் வரும்.  உடல் இயக்கமும்  வித்தியாசமாக இருக்கும் இந்த நேரத்தில் விழித்திருந்தால் மிக நல்லது.

இந்த நேரத்தில் விரதம் இருந்து முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் செய்யும்போது ஈத்தர் சக்தி உச்சந்தலையில் உள்ள பீனியல் கிளாண்டில்  ஆனந்த சுரப்பி மூளையை அடைந்து நல்ல சுரப்பிகளை சுரக்கச் செய்யும். இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசிர்வாதம் செய்து கொள்வதால் DNA வில்   உள்ள கெட்ட பதிவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் தான் மகா சிவராத்திரி அன்று விழித்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

Recent Posts

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

1 hour ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

2 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

2 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

3 hours ago

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

3 hours ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

3 hours ago