அடேங்கப்பா.! சிவராத்திரிக்கு இவ்ளோ பெரிய அறிவியல் காரணம் இருக்கா..?
மகா சிவராத்திரி – மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக பிரசித்தி பெற்றது. நாம் இதை ஆன்மீக வழியில் கடை பிடித்தாலும் இதற்கென்று வியப்பூட்டும் அறிவியல் காரணமும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிவராத்திரியம் நிலவின் தத்துவமும் :
நம் மனம் சந்திரனின் இயக்கத்தை வைத்து கணிக்கப்படுகிறது. மனிதனின் மனம் சந்திரனை போல் நிலையில்லாதது நமக்கு எண்ணங்கள் மாறி மாறி வருவதைப் போல் நிலவின் சுழற்சி கணக்கும் மாறி மாறி தான் வரும் அதனால் தான் சந்திரனை மனோகாரகன் என ஜோதிடத்தில் கூறுகின்றனர். அதாவது சந்திரன் மனதையும் நம் எண்ணங்களையும் ஆள்பவர்.
மனநோயாளிகள் அமாவாசை பௌர்ணமி தினங்கள் ஒட்டி வரும் நாட்களில் தான் அதிகம் துன்பப்படுகிறார்கள்.. ஏனென்றால் அமாவாசை பௌர்ணமி முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனின் காந்த சக்தியால் அனைத்து ஜீவராசிகளுக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்களின் தாக்கம் தான் துன்பமாக அனுபவிக்கின்றோம்.
நம் முன்னோர்கள் அம்மாவாசை பௌர்ணமி தினங்களை கொண்டாடி வந்தனர், அந்த சமயங்களில் நம் உடல் இயக்கத்தில் நிதானம் கொண்டு வரவும் ,மனவலிமை பெறவும் பல விரதம் மற்றும் பூஜை முறைகளை மேற்கொண்டனர் ஆனால் நாம் இன்று அதை கடைபிடிப்பதில்லை.
மனிதனின் அலைபாயும் மனதை சிவத்தின் மீது வைத்து தியானம் செய்ய வேண்டும் என்பதை சிவராத்திரியின் நோக்கமாகும் .சந்திரன் வளரும் நாள் 15, தேயும் நாள் 15 இதில் தேய்பிறை 14-ஆம் நாள் தான் சிவராத்திரி வரும்.
மகா சிவராத்திரியும் அறிவியல் காரணமும்:
இந்த உலகம் இயங்க ஒரு சக்தி தேவை, அதுதான் ஈத்தர் சக்தி என அறிவியல் கூறுகிறது. இந்த சக்தி சிவராத்திரி நாட்களில் அதிகமாக வரும் அதுவும் மகா சிவராத்திரி அன்று ஈத்தர் சக்தி மிக அதிகமாக இருக்கும்.
பூமியானது பெரிய நீள் வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறும் நேரத்தில் தான் மகா சிவராத்திரி வரும். பகல் நேரத்திலும் ஈத்தர் சக்தி இருக்கும் ஆனால் இரவு 9 – 2:00am இந்த நேரத்தில் ஈத்தர் சக்தி அதிகம் வரும். உடல் இயக்கமும் வித்தியாசமாக இருக்கும் இந்த நேரத்தில் விழித்திருந்தால் மிக நல்லது.
இந்த நேரத்தில் விரதம் இருந்து முதுகுத்தண்டை நேராக வைத்து தியானம் செய்யும்போது ஈத்தர் சக்தி உச்சந்தலையில் உள்ள பீனியல் கிளாண்டில் ஆனந்த சுரப்பி மூளையை அடைந்து நல்ல சுரப்பிகளை சுரக்கச் செய்யும். இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசிர்வாதம் செய்து கொள்வதால் DNA வில் உள்ள கெட்ட பதிவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் தான் மகா சிவராத்திரி அன்று விழித்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.