கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா?. அட இது தெரியாம போச்சே..!

Published by
K Palaniammal

கண்ணாடி வளையல் – பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது ,அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கண்ணாடி வளையல் என்பது பெண்கள் அணியும் ஒரு ஆபரணமாகும். இது மஞ்சள் குங்குமத்திற்கு அடுத்து ஒரு மங்கள பொருளாக கருதப்படுகிறது ,அதனால் சுப நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி வளையல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக வளைகாப்பு ,திருமணம், பெண்கள் பூப்படையும் விழா போன்ற நிகழ்வுகளில் கண்ணாடி வளையல் முக்கிய பொருளாக உள்ளது. அம்மனுக்கு புடவை சாட்டும் போது அதில் நிச்சயம் கண்ணாடி வளையல் இடம் பெற்று இருக்கும்.

கண்ணாடி வளையலால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:

  • கண்ணாடி வளையல்களை அணிந்திருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களுக்கும் எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் தாக்காது, மேலும் நமக்குள் இருக்கும்  சக்திகளை இழக்க விடாமல் பாதுகாக்கும்.
  • சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய பொருள். தேவையில்லாத மனக்குழப்பம் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
  • கர்ப்பிணி பெண்களை எந்த ஒரு தீய சக்தியும் அண்டாமல் இருக்கவும் ,கருவிலுள்ள குழந்தையின் செவித்திறனின் மேம்பாட்டிற்கும் கண்ணாடி வளையல் சிறந்ததாக கருதப்படுகிறது.
  • மேலும் கண் திருஷ்டியை போக்கும் வல்லமையும் இந்த கண்ணாடி வளையலுக்கு உண்டு.

கண்ணாடி வளையலில்  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு பலன்களும் உள்ளது.

  • சிவப்பு நிறம் ஈசனின் அனுகூலத்தையும், எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெற்று தரும்.
  • பச்சை நிற வளையல் அம்பாளின் அனுகூலத்தையும் ,மனசாந்தியையும் கொடுக்கும்.
  • மஞ்சள் நிற வளையல் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும்.
  • கருப்பு நிற வளையல் மன தைரியத்தை கொடுக்கும். இப்படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பலன்களும் உள்ளது.

இனிமேல் கண்ணாடி வளையல் அணியாத பெண்கள் கூட வளையல்களை அணிந்து அதன் மகத்துவத்தை பெறுங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago