கண்ணாடி வளையல்கள் அணிந்தால் இவ்வளவு நன்மைகளா?. அட இது தெரியாம போச்சே..!
கண்ணாடி வளையல் – பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது ,அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கண்ணாடி வளையல் என்பது பெண்கள் அணியும் ஒரு ஆபரணமாகும். இது மஞ்சள் குங்குமத்திற்கு அடுத்து ஒரு மங்கள பொருளாக கருதப்படுகிறது ,அதனால் சுப நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி வளையல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக வளைகாப்பு ,திருமணம், பெண்கள் பூப்படையும் விழா போன்ற நிகழ்வுகளில் கண்ணாடி வளையல் முக்கிய பொருளாக உள்ளது. அம்மனுக்கு புடவை சாட்டும் போது அதில் நிச்சயம் கண்ணாடி வளையல் இடம் பெற்று இருக்கும்.
கண்ணாடி வளையலால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:
- கண்ணாடி வளையல்களை அணிந்திருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களுக்கும் எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் தாக்காது, மேலும் நமக்குள் இருக்கும் சக்திகளை இழக்க விடாமல் பாதுகாக்கும்.
- சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய பொருள். தேவையில்லாத மனக்குழப்பம் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
- கர்ப்பிணி பெண்களை எந்த ஒரு தீய சக்தியும் அண்டாமல் இருக்கவும் ,கருவிலுள்ள குழந்தையின் செவித்திறனின் மேம்பாட்டிற்கும் கண்ணாடி வளையல் சிறந்ததாக கருதப்படுகிறது.
- மேலும் கண் திருஷ்டியை போக்கும் வல்லமையும் இந்த கண்ணாடி வளையலுக்கு உண்டு.
கண்ணாடி வளையலில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு பலன்களும் உள்ளது.
- சிவப்பு நிறம் ஈசனின் அனுகூலத்தையும், எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெற்று தரும்.
- பச்சை நிற வளையல் அம்பாளின் அனுகூலத்தையும் ,மனசாந்தியையும் கொடுக்கும்.
- மஞ்சள் நிற வளையல் மகிழ்ச்சியைப் பெற்றுத் தரும்.
- கருப்பு நிற வளையல் மன தைரியத்தை கொடுக்கும். இப்படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பலன்களும் உள்ளது.
இனிமேல் கண்ணாடி வளையல் அணியாத பெண்கள் கூட வளையல்களை அணிந்து அதன் மகத்துவத்தை பெறுங்கள்.