பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

pooja room mirror

முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும்  இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கண்ணாடியின் தனித்துவம் :

பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து  பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை கண்ணாடி முன் நின்று கூற வேண்டும் என கூறுவார்கள் ஏனென்றால் அது தன் முன் இருப்பதை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது.

பூஜை அறையில் கண்ணாடியை வைத்து நாம் வழிபடும்போது நம் உடலின் நாடியை திறக்கும் எனக் கூறப்படுகிறது. தெய்வத்தின் அருகில் இதை வைக்கும் போது தெய்வ நாடியும்  மனித நாடியும்  ஒன்று சேரும் ,இதனால் நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற்றப்படும். மேலும்  நம் பிரார்த்தனைகள் பலிக்கும்.

கண்ணாடியை பூஜை அறையில் வைக்கும் முறைகள்:

கண்ணாடியை பூஜை அறையில் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கிய திசையில் வைக்க வேண்டும்.புதிய கண்ணாடி மட்டுமே வைக்க வேண்டும் . கண்ணாடி மகாலட்சுமியின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும்.

கண்ணாடி முன் வைக்க வேண்டிய பொருள்கள்:

கண்ணாடியின் முன்பு நமக்கு என்ன தேவையோ அதை ஒரு கண்ணாடி பவுலில் வைக்க வேண்டும். அதாவது ஒரு கண்ணாடி பௌலில் பச்சரிசி வைத்து அதிலே மஞ்சள் மற்றும் நாணயங்கள் சேர்த்து அதன் பிம்பம் கண்ணாடியில் படும் மாதிரி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி பவுலின் கல் உப்பு, மஞ்சள், நாணயம் இவற்றையும் வைக்கலாம். அல்லது வெறும் நாணயங்கள் மட்டுமே வைக்கலாம். இப்படி உங்களுக்கு எது ஏதுவாக உள்ளதோ அதை வைக்கலாம். மேலும் பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வரும்போது நம் மூதாதையரின் நல் ஆசியையும் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆகவே நமது பூஜை அறையில் சிறு சிறு மாற்றங்களை செய்து நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை காண்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்