கடவுளுக்கு பூஜை செய்யும் மலர்களுக்கு இவ்வளவு பலன் இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Published by
K Palaniammal

பூஜைக்கு உரிய பூக்கள் -இறைவழிபாட்டில் பூக்கள் கொண்ட அர்ச்சிக்கும் வழக்கம் உள்ளது, அதில் எந்தக் கடவுளுக்கு எந்த பூக்களை அர்ச்சிக்கலாம் அதன் பலன்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாத பூக்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இவ்வுலகில் கோடிக்கணக்கான மலர்கள் இருந்தாலும் இறைவழிபாட்டுக்கு என்றே சில பூக்களை பயன்படுத்துவோம் ஆனால் அதன் பலன்கள் பற்றி பெரிதாக அறிந்திருக்க மாட்டோம்.

பூக்களும் அதன் பலன்களும்:

  • அல்லிப்பூ வைத்து பூஜை  செய்தால்  செல்வம் பெருகும்.பூவரசம் உடல் நலத்தை காக்கும்.  வாடாமல்லி மரண பயத்தை போக்கும். மல்லிகை குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும்.
  • செம்பருத்தி ஆத்ம பலனை கொடுக்கும்,நோயற்ற வாழ்வை தரும்.காயம்பூ இது ராமருக்கு பிடித்த மலர்.அரளிப்பூ கடனை தீர்க்கும் முருக வழிபாட்டுக்கு உரிய மலர்.
  • ரோஜாப்பூ குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும். மரிக்கொழுந்து தெய்வத்தின் அனுகூலம்  கிடைக்கும்.
  • நித்தியாவட்டை குழந்தை பேரு கிடைக்கும், சிவபெருமானுக்கு உகந்த மலர். சரஸ்வதிக்கும் உகந்த மலராகும். இந்த நித்தியாவட்டையை பைரவருக்கு பயன்படுத்தக் கூடாது.
  • நீல நிற சங்கு பூ மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும் மேலும் ஆரஞ்சு, சிகப்பு நிற மலர்கள் துளசி, தாமரை போன்றவை மகாவிஷ்ணுவுக்கு உரியதாகும்.
  • நித்தியகல்யாணி மகாலட்சுமியின் அருளை பெற்று தரும்.தங்க அரளி குருவின் அருளையும் திருமண தடையையும் போக்கும் .பவளமல்லி பக்தியில்  ஆர்வத்தைப் பெற்றுத் தரும்.
  • மனோரஞ்சிதம் தெளிவான மனதை கொடுக்கும் .செந்தாமரை அறிவு, பணம் ஆகியவற்றில் வளர்ச்சியை தரும் .தாழம்பூ பெண் தெய்வத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சிவனுக்கு பயன்படுத்தக் கூடாது.
  • வெண்தாமரை கல்வியைப் பெற்றுத் தரும் .நாகலிங்கப்பூ செல்வ செழிப்பை கொடுக்கும். முல்லைப் பூ புது தொழிலை ஏற்படுத்தும்  .சாமந்திப்பூ மன சக்தியை அதிகரிக்கும்.
  • செங்காந்தள் சண்டை சச்சரவை நீக்கும். கள்ளி பூ  தனலட்சுமி அருளை தரும்  .தென்னம்பாளை குலதெய்வ ஆற்றலை பெற்றுத்தரும் .

சில தெய்வங்களுக்கு சில மலர்களை பயன்படுத்தக் கூடாது:

  • விநாயகருக்கு துளசியை பயன்படுத்தக் கூடாது. பெருமாளுக்கு ஊமத்தம் பூ எருக்கன் பூவை பயன்படுத்தக் கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் பயன்படுத்தக் கூடாது.
  • மகாலட்சுமிக்கு தும்பை பூவை தவிர்க்கவும். சூரியனுக்கு வில்வம் பயன்படுத்தக் கூடாது. சரஸ்வதிக்கு பவளமல்லி பயன்படுத்தக் கூடாது.
  • பைரவருக்கு நந்தியாவட்டை மற்றும் வெள்ளை நிற பூக்களை தவிர்க்கவும்.

ஆகவே இந்த பூக்களை கொண்டு அர்சித்து  இறைவனின் பரிபூரண அருளை பெற்று வாழ்வில் மகிழ்ச்சியை பெறுங்கள்.

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

20 minutes ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

1 hour ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

4 hours ago