அனுகிரஹகம் அருளும் அனுஷம் அவதரித்த தினம் இன்று
இன்று வைகாசி அனுஷம் இம்மாதத்தில் வரும் அனுஷம் மிகவும் விஷேசமானது. காரணம் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவார் அவதரித்த தினம் இன்று.
விழுப்புரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் மே 20 தேதி 1894 வருடம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த பெரியவாளுக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவாமி நாதன்.தந்தை சுப்பிரமணிய சாத்திரி கல்வி அதிகாரியாக பணியாற்றிவர். தமது துவக்கக் கல்வியை ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் சுவாமி நாதர் கற்றார். இது திண்டிவனத்தில் உள்ளது.
ஒரு முறை சுவாமி நாதனை அவருடைய தந்தை காஞ்சி சங்கர மடத்தின் 66 வது பீடாதிபதி சந்திக்க சென்றார்.மேலும் அடிக்கடி சென்று தன் மகனோடு தரிக்கும் வழக்கத்தை சுப்பிரமணிய சாத்திரி கொண்டிருந்தார். காஞ்சி சங்கர மடத்தின் 66 வது பீடாதிபதி சுவாமி நாதனை தன் அருட்பார்வையால் பார்த்தார்.அப்பொழுது சுவாமி நாதன் முகத்தில் தோன்றிய பேரொளியை பார்த்து இவன் பெரிய மகனாக வருவான் என்றார்.
அந்த மாகனின் வாக்கு பலித்தது.ஆம் 66பீடாதிபதியாக இருந்த அவர் சித்தியாக வேண்டிய காலம் வந்தது ஆனால் மனதில் அடுத்து மடத்தின் பீடாதிபதியாக சுவாமி நாதன் தான் வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கவே அதற்குள் சித்தி பெறும் நேரம் நெருங்கியது அதனால் தனது சிடர்களுள் ஒருவரை 67 வது மடதிபதியாக நியமித்து சித்தி அடைந்தார்.
ஆனால் காஞ்சி சங்கர மடத்தின் 67 வது பீடாதிபதியாக பதவி வகித்த சிலநாட்களில் 67 வது பீடாதிபதியும் சித்தியாகி விட்டார்.தமது 13 வது வயதில் காஞ்சி சங்கர மடத்தின் 68 வது பீடாதிபதியாக சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள் என்ற பெயருடன் பொறுப்பேற்றார்.
சுமார் 87 வருடங்கள் வரை அம்மடத்தின் பீடாதிபதியாக இருந்த அந்த நடமாடும் தெய்வத்தை சர்வே ஈஸ்வரனாகவே பாவித்தனர்.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தனது அருட்பார்வையால் அரவனைத்து அருளும் காமாட்சி தாயாகவே தயாளன் திகழ்ந்தார்.
பெரியவா ,மகா பெரியவா,உமாச்சி தாத்தா,சங்கர சாரியார் என்றெல்லாம் அந்த தெய்வத்தை அழைத்தனர்.தனது கரத்தை உயர்த்தி அருளும் பொழுது எல்லை இல்லா பிறவி கடனை நீந்திய மகிழ்ச்சியை தன் பக்தர்களுக்கு தந்த தெய்வம் இம்மண்ணில் அவதரித்த அவதார தினமாகும்.தனது துறவு வாழ்வில் அறத்தையும் ,ஆன்மீகத்தையும் இந்த நாடு முழுவதும் பரப்பிய பரமாச்சாரியார்.வேதங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தவர்.சிக்கல்களை தீர்க்கும் சிவமாக திகழ்ந்தவர்.அவரிடம் சிக்கல்களே தோற்று போய்விடுமாம்.அப்படி அவரால் தீர்க்க பட முடியாத பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது எல்லாவற்றிக்கும் தீர்வு அந்த எல்லையில்லா ஆற்றல் இடமே இருந்தது. ஜாதி ,மதம்,மொழி கடந்து அனைவரையும் தனது அருட் பார்வையால் ஆட்கொண்டவர்.அவருடைய திருவிளையாடல்கள் எல்லாம் அற்புதமானவை அவற்றை அனுப்வித்தவர்கே அதன் அருமை புரியும்
அப்படி ஆச்சாரியாரின் அனுபவத்தை பெற்றவர்கள் எல்லாம் இன்று தங்களின் அனுபவத்தை மற்றவருக்கு புத்தகம் வடிவிலும் , சமூக வளைதலங்களிலும் பகிர்ந்து பரமனின் பவித்திரத்தை பார் முழுவதும் அறியும் படி செய்து வருகின்றனர்.இவற்றின் மூலம் தான் தெரிகிறது.தெய்வம் வாழ்ந்த உலகத்தில் நாமும் வாழ்கிறோம் என்று அவரை அறியாதவர்களும் அவரை பற்றி அறிய முற்படுகின்றனர்.
எத்தனையோ திருவிளையாடல் எத்தனையோ அரவணைப்புகள் என்று பெரியவரை பற்றி சொல்ல ஒரு கட்டுரை போதுமா என்ன..?
பெரியவர் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்று :
உங்கள் எல்லோருக்கும் தெரியும் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களை அவர் மகாபெரியவாரின் தீவிர பக்தர்களுள் ஒருவர்.இவர்க்கு ஒருமுறை ஐ.நா சபையில் பாட அழைப்பு வந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை அவருக்கு பாடும் அளவிற்கு குரல் வளம் சரியில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை பிள்ளை ஒரு அபாயம் என்றால் தன் அம்மாவை தேடும் முதலில் அதனை போலவே நடமாடும் தெய்வமாக காஞ்சியில் கருணை கடலாக அருளை வாரி அருளும் தெய்வத்தை நினைத்து மனமுருகி வேண்டினார்.
கச்சேரி ஆரம்பமாகும் நேரமும் வந்துவிட்டது ஆனால் குரல்வளம் குணமாகவில்லை இனி எல்லாம் அந்த சர்வே ஈஸ்வரனின் பாடு என்று பாரத்தை போட்டு விட்டு பாட தொடங்கினார்.தன்னை அறியாமல் கண்ணீர் கண்களில் பெருக்கெடுக்க பாடினார். என்னவோ தெரிவில்லை அன்று கச்சேரியில் மிகவும் அற்புதமாக பாடினார் .அவர் பாடி முடிக்கவே பலத்த கைத்தட்டல் காதை கிழித்தது.பாட தொடங்கு முன் சரியில்லாமல் இருந்த குரல்வள பிரச்சனை இப்பொழுது எங்கு போனது என்றே தெரியவில்லையாம்.
தட்டல் நடுவே அபாயம் என்றால் நான் இருக்கிறேன் என்று அருளும் பெரியவாளை தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே அந்த கருணை கடலை நினைத்து வணங்கினாராம். இப்படி எத்தனையோ திருவிளையாடல் தன் பக்தர்களிடத்தில் நடத்தி அவர்களின் துன்பம் போக்கி அருட்பார்வை அருளிய தெய்வம் இன்று அதிஷ்டானத்தில் இருந்து தன் பக்தர்களுக்கு அருளை அருளி வருகிறது.பெயர் போற்றும் பெரியவரை வணங்கி பேரருளை பெறுவோம்.