அன்னாபிஷேகம் 2024-கோடிலிங்க தரிசனம் பெற்ற பலனை தரும் அன்னாபிஷேகம்..!

உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் உயிர்கள் உண்பதற்கு இரையையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது

Annabhishekam (1)

சென்னை -இந்த ஆண்டு அன்னாபிஷேகம் எப்போது அதன் பலன்கள் மற்றும் உருவான வரலாறு பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சிவபெருமானை வழிபட முக்கிய நாட்களாக பிரதோஷம் ,சிவராத்திரி, சோமவாரம் போன்ற தினங்கள் கூறப்படுகிறது. அதேபோல் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுவது சிறப்பாக கூறப்படுகிறது. “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உள்ளது .இதை பலரும் சோம்பேறிகளுக்காக கூறுவது உண்டு. ஆனால் உண்மையில் என்னவென்றால் இறைவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை கண்டால் சொர்க்கம் நிச்சயம் என்பதே இதன் உண்மை பொருள் ஆகும். மேலும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கத்திற்கு சமமாக கூறப்படுகிறது.அதனால் தான் கோடி லிங்க தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது

அன்னாபிஷேகம் 2024 -ல்  எப்போது?

நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அன்னாபிஷேகம் அனைத்து சிவா ஆலயங்களிலும் வழிபடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்ன வடிவில் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றது. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் உயிர்கள் உண்பதற்கு இரையையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அன்னாபிஷேகம் என்பது  பச்சரிசியில் செய்த சாதத்தை ஆற வைத்து அதனைக் கொண்டு லிங்கத் திருமேனி முழுவதும் மறைத்து அதன் மேலாக காய் மற்றும் கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பதாகும் .

பலன்கள் ;

சிவபெருமான் அபிஷேகப் பிரியராவார் , அதனால் 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பதால் மீட்க முடியாத நகை பிரச்சனை, தொழில் பிரச்சனை, உணவுப் பிரச்சினை என பல பிரச்சனைகள் தீரும் எனக் கூறப்படுகிறது. மேலும் அன்னதோஷம் நீங்கும் என்பதும் ஐதீகமாகும் , நாம் செய்த பாவம் நம் முன்னோர்கள் செய்த பாவம் நீங்கி  நம்  தலைமுறையினருக்கு அன்ன குறைவு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஐப்பசியில் வரும் பௌர்ணமியில் தான் சந்திரன் தனது சாபத்தை முழுமையாக தீர்த்து 16 கலைகளுடன்  முழு பொலிவுடன் தோன்றுகிறார் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்றைய தினத்தில் தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதாக அறிவியல் காரணங்களும் கூறப்படுகிறது.

அன்னாபிஷேகம் உருவான கதை;

பிரம்மதேவனின்  கர்வத்தை அடக்க சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்த்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் தொற்றியது . அந்த கபாலமானது பிச்சை பாத்திரம் ஆக மாறியது . யார் யாசகம் இடும் போது அந்த பாத்திரம் நிரம்புகிறதோ  அப்போதுதான் கபாலம் சிவபெருமானின் கையை விட்டு அகழும் என்பது விதியானது .சிவபெருமானும் காசியை நோக்கி சென்றார்.

அங்கு அன்னபூரணி அன்னம் இடுகிறார், அதனால் பாத்திரம் நிறைந்து கபாலமும் விலகியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் இந்த ஐப்பசி பௌர்ணமி தினமாகும். அதனால் தான் இந்த நாளில்  அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. “திங்கள் முடி சூடியவர்க்கு மதி முழுமையாக இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்வதுதானே சிறப்பு”.. இந்த ஐப்பசி பௌர்ணமி நாளில் அபிஷேகத்திற்கு தேவையான பச்சரிசியை கொடுப்பது சிறந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே  அன்னாபிஷேகத்தை கோவிலுக்குச் சென்று கண் குளிரக் கண்டு அதன்  பலனை பெறுங்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்