ஆடிப்பெருக்கு 2024- வீட்டில் வழிபடும் முறை மற்றும் தாலிக்கயிறு மாற்றும் நேரம்..

aadi 18

Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடிப்பெருக்கின் சிறப்புகள்;

உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு .

நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த விவசாயத்திற்கு தேவையானது நீர்தான். இந்த ஆடி மாதத்தில் தான் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு இருக்கும். அதன் அடிப்படையில் தான் விவசாயம் ஆடி மாதம் துவங்கப்படுகிறது

.மேலும் இந்த சமயங்களில் தான் காவிரியில் இருந்து நீர் பெருக்கெடுத்து அனைத்து ஊர்களையும் சென்றடையும் அதனை கருத்தில் கொண்டு தான் ஆடி 18 அன்று காவிரிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஆடி பதினெட்டில் செய்ய வேண்டியவை;

இந்த நன்னாளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் இன்று துவங்கும் அனைத்து செயல்களும் பெருகும் என்று கூறப்படுகிறது. கட்டுமான தொழில் துவங்க, வாஸ்து பூஜை செய்ய, நிலவாசல் வைக்க ,புதிதாக போர் போடுவதற்கும்,  புதிய தொழில் துவங்குவதற்கு என அனைத்து செயல்களையும் செய்ய சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

இந்த நன்னாளில் தங்க நகை தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் சக்திக்கு என்ன முடிகிறதோ அதை வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக உப்பும் மஞ்சளும் வாங்கி வைத்தாலே போதுமானது .மேலும் அன்னதானம் இந்நாளில் வழங்குவது மிகச் சிறப்பாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் வழிபடும் முறை;

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சனி கிழமை  ஆடி 18 கொண்டாடபடவுள்ளது . ஆடி பதினெட்டு அன்று காவிரி நதியில் நீராடி வழிபடும்போது சகலவித பாவங்களும் நீங்கி நன்மை நம் வாழ்வில் கிடைக்கும். காவிரி நதி அருகில் இல்லை எனில் வீட்டிலேயே ஒரு கலசத்தில் தண்ணீர் எடுத்து அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பூ சேர்த்து அந்த நீரை காவிரி தாயாக பாவித்து பூஜையறையில் வைத்து நன்றி தெரிவித்து வழிபாடு செய்யலாம். மேலும் காப்பரிசி மற்றும் நாவல் பழத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

மாங்கல்யம் மற்றும் முறை;

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது மாங்கல்யத்தை மாற்றுவது சிறப்பாகும். ஏனெனில் அதன் தன்மை நீங்கி இருக்கும் .அதை புதுப்பித்துக் கொள்வது நல்லது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை செய்ய சிறந்த நாளாக ஆடி 18 உள்ளது. இதனால் கணவனின் ஆரோக்கியம் மேம்பட்டு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். எனவும் நம்பப்படுகிறது.

தாலி செயின் ஆக அணிந்து இருந்தால் அதை கழட்டும் முன்பு ஒரு மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டி பிறகு தாலி செயினை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கிழக்கு முகம் பார்த்து  மாட்டிக்கொள்ளலாம். தாலிக்கயிறு மாற்றும் நேரம் காலை 7.35  முதல் 8. 50 வரையிலும், காலை 10:35 லிருந்து 11; 50 வரையிலும் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது சிறப்பாகும்.

மாங்கல்யம் மாற்றிய பிறகு 3 அல்லது 5 சுமங்கலிகளுக்கு மங்கள பொருட்களான குங்குமம் மஞ்சள் ,தாலிக்கயிறை கொடுக்க வேண்டும் . மாலைப் பொழுதில் மாற்றுவது சிறப்பல்ல .இறங்கும் பொழுது தாலிக்கயிறு மாற்றக்கூடாது .மேலும் ஆடி 18   எந்த கிழமையில் வந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆகவே ஆடி பதினெட்டாம் பெருக்கில் காவிரித் தாயை மனதில் வைத்து நன்றி செலுத்தி அவரின் பரிபூரண ஆசியைப் பெற்று காவிரி நதியை  போல் நம் வாழ்வும் பெருகட்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்