ஆடி அமாவாசை 2024.. பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் செய்ய சரியான முறை எது?
ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு சிறப்பான நாளாகும்.
ஆடி அமாவாசை 2024;
ஆகஸ்ட் 3 ந்தேதி மாலை 4;56 க்கு துவங்கி ஆகஸ்ட் 4 ந் தேதி மாலை 5;32 க்கு முடிவடைகிறது . இந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை வருகின்றது. தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி அம்மாவாசை பித்ரு தர்ப்பணத்திற்கு ஏற்ற நாள். இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்க்க வருகின்றனர் என நம்பப்படுகிறது.
பித்ருலோகத்திலிருந்து புறப்படும் நாள் தான் ஆடி அமாவாசை ஆகும். அவர்களை நாம் நினைவில் வைத்துள்ளோம் என்பதற்கும் பூலோகத்திற்கு வரவேற்கும் விதமாகவும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. தர்ப்பணங்களில் மிக எளிமையானதும் பித்ருக்களுக்கு பிடித்ததும் எள்ளும் தண்ணீரும் இறைக்கும் முறை.
தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள்;
தாய் தந்தையை இழந்த ஆண் தர்ப்பணம் செய்யலாம். கணவனை இழந்த பெண் தர்ப்பணம் செய்யலாம். சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் செய்யக்கூடாது. பெண்கள் எள்ளும் தண்ணீரும் இருக்கக் கூடாது .அதற்கு பதில் பித்ருக்களுக்கு பிடித்த உணவை சமைத்து பசித்தவருக்கு தானமாக வழங்கலாம்.
பெண்கள் அன்றைய தினம் விரதம் இருக்கக் கூடாது. காலை சூரிய உதயத்திற்கு பின் 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் தர்ப்பணம் செய்யலாம். ராகு காலம் ,எமகண்ட நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
வழிபடும் முறை;
புனித நதிக்கரை, ராமேஸ்வரம் கடல் போன்ற புனிதமான இடங்களில் தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் அந்தணரை அழைத்து தானம் வழங்கலாம். அதுவும் செய்ய முடியவில்லை எனில் எள்ளும் தண்ணீரும் இரைத்து கொள்ளலாம்.
எள்ளும் தண்ணீரும் இரைக்கும் முறை;
எள்ளும் தண்ணீரும் இரைப்பவர்கள் வெறும் தரையில் அமரக்கூடாது ஏதேனும் வெண்ணிற துணியை விரித்து அதன் மேல் அமர வேண்டும். தாம்பூல தட்டை வைத்து உங்களது உள்ளங்கையில் கருப்பு எள் மற்றும் பச்சரிசியை வைத்துக் கொள்ளவும். ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் எடுத்து வலது கையில் இருக்கும் எள் மற்றும் பச்சரிசியை தாம்பூல தட்டில் விழுமாறு தண்ணீர் ஊற்றி இறைக்க வேண்டும்.
இரைக்கும் போது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இடையில் எள்ளும் தண்ணீரும் செல்லுமாறு தட்டில் விழ செய்ய வேண்டும். ஒரு எள் கூட கையில் இருக்கக் கூடாது. நன்றாக கையை கழுவி தாம்பூலத்தில் வைத்து விடவும். எள்ளும் தண்ணீரும் இரைக்கும் போது எங்களுடைய முன்னோர்கள் அனைவருக்கும் என்று சொல்ல வேண்டும்.
பிறகு அந்தத் தட்டில் உள்ளவற்றை ஏதேனும் நீர் உள்ள குளம், ஏரி ,குட்டையில் கரைத்து விடவும். மேலும் அமாவாசை அன்று கோலம் போடக்கூடாது. பிறகு காகத்திற்கு உணவு வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். அன்றைய நாள் கட்டாயம் பசித்தவருக்கு உணவு வழங்க வேண்டும் .மாலையில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்து கொள்ளவும் இதுவே அம்மாவாசை வழிபாடாகும்.
பலன்கள்;
முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ,பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் மேலும் காரியத்தடை திருமண தடை , குழந்தை பிறப்பில் தடை என அனைத்து தடைகளும் அகழும்.
ஆகவே நம் முன்னோர்களின் பரிபூரண ஆசியை நாமும் நம் வாரிசுகளும் பெற வேண்டும் என்றால் அமாவாசை தினத்தின் பித்ரு கடனை செலுத்துங்கள் .குறிப்பாக வரும் ஆடி அமாவாசை சிறப்பாக செய்து முன்னோர்களை வரவேற்று அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள்.