அடேங்கப்பா..!ஆடி மாதத்தில் செய்யும் தானத்திற்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?
Devotion -ஆடி மாதம் எந்த கோவிலுக்கு எதை தானமாக கொடுத்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இங்கே காணலாம்.
தானம் கொடுத்தால் புண்ணியம் சேரும் என்று கூறுவார்கள் அதிலும் ஆடி மாதம் கொடுப்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.
தானங்களும் அதன் பலன்களும்;
ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்ற தேவையான பொருட்களை தானமாக கொடுத்தால் மன கஷ்டம் படிப்படியாக நீங்கும்.
திங்கள் கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு உரிய பால் தயிர் தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் வேலையில் உள்ள கஷ்டங்கள் நீக்கும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை முருகன் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு தேவையான விபூதியை தானமாக கொடுக்கலாம் .இதன் மூலம் பில்லி சூனியம் விலகும் .தொட்ட காரியம் துலங்கும் .
புதன்கிழமை பெருமாளுக்கு வெண்பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து அனைவருக்கும் தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் திருமணம் தடை , காரிய தடை நீங்கி காரிய சித்தி கிடைக்கும்.
வியாழக்கிழமை சிவன் கோவிலில் இருக்கும் தட்சணாமூர்த்திக்கு நெய்வேத்தியமாக கற்கண்டு கொடுத்து பிறகு அனைவருக்கும் தானமாக கொடுக்க வேண்டும் இதன் மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல படிப்பாற்றல் கிடைக்கும். கவலை குழப்பங்கள் நீங்கும்,
வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் அல்லது ஏதேனும் பெண் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியமாக வைத்து பின் அனைவருக்கும் அதைத் தானமாக வழங்க வேண்டும் .இத மூலம் வாழ்க்கை உயர்வு, பதவி உயர்வு, நீண்ட நாள் வராத பணம் வந்து சேரும் .
சனிக்கிழமை பெருமாளுக்கும் ஆஞ்சநேயருக்கும் துளசி மாலையை சாத்த வேண்டும். அல்லது மல்லிகையை மாலையாக சாற்றவேண்டும் . இவ்வாறு செய்யும்போது சனியின் தாக்கம் குறையும், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் .மேலும் 21 வெற்றிலையை மாலையாக செய்து ஆஞ்சநேயருக்கு சாற்றினால் செய்யும் செயலில் ஏற்படும் தடைகள் விலகி போகும்.
இது ஆடி மாதத்திற்கு மட்டும் உரிய தானங்களாகும். முடிந்தவர்கள் இந்த தானங்களை செய்து வந்தால் அதற்கு உண்டான பலன்களை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம்.