அதியமான் கோட்டை தட்சண கால பைரவருக்கு சிறப்பு பூஜை

Default Image

தருமபுரி தட்சண காசி கால பைரவர் கோவிலில் நேற்று நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்வில் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.

தருமபுரி மாவட்டம், அதியமான்  கோட்டையில் உள்ள தட்சண காசி கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி விழாநேற்று  நடைபெற்றது. இந்த் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி கோவிலை 18 முறை சுற்றி வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துவார்கள். தேய்பிறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பூசணிதீபம் ஏற்றி தங்களது நேர்த்தி கடன்களை செய்தார்கள்.

இந்த கோவிலில் நேற்று அதிருத்ர யாகம் உள்ளிட்ட பல யாகங்கள் நடந்தது. இதையடுத்து ராஜ அலங்காரத்துடன் கால பைரவர்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதற்கு பிறகு கால பைரவருக்கு 64  வகையான அபிஷேகங்கள், 1008 அர்ச்சனைகள்,  28 ஆகம பூஜைகள், 4 வேதபாராயணம் சிறப்பு உபகார பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்கள்.மேலும் பகல் 12.மணிக்கு மேல் தருமபுரி தட்சண காசி கால பைரவர் மூன்று முறை அலங்கரிக்க பட்ட தேரில் மூன்று முறை கோவிலை சுற்றி வந்து தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்