மும்பையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைந்த 22 அடி விநாயகர் சிலை..!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது, தற்போது நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு சிறிதளவுகூட பாதிப்பு ஏற்படாத வகையில், மும்பையில் 22 அடி விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.
அந்தந்த சிலையானது மூங்கில் குச்சிகள், காகிதக்கூழ் மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய வண்ணப் பொடிகளை பயன்படுத்தி செய்துள்ளனர். இதற்காக 15 பணியாளர்கள், ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். மேலும், இந்த சிலையின் எடை சுமார் 1,500 முதல் 2,000 கிலோவாகும்.
இந்த சிலையை உருவாக்கியவர் கூறுகையில் சேலையை செய்யும் பொது, துணியால் மூடியே நாங்கள் செய்துள்ளோம். இதற்க்கு எந்த விதமான பிளேஸ் போர்டுகளை பயன்படுத்த வில்லை என்றும் கூறினார்கள். மேலும், இந்த சிலையை தண்ணீரில் போட்டால், 45 நிமிடங்களில் கரைந்து விடும் எனவும் கூறியுள்ளார்.