நம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம் என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் தென்படும் உருவம், வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடுவதாக இருக்கும். எனவே தெய்வத் திருவுருவங்களின் மீது விழிப்பது நல்லது. நிலைக்கண்ணாடி, தண்ணீர், ஆலயக் கோபுரம் போன்றவற்றையும் பார்த்து இருக்கலாம்.
நம் வீட்டு பூஜையறையில் கனிகளை பரப்பி வைத்துப் கண் விழித்தால் கனிவான வாழ்க்கை அமையும். வலம்புரிச் சங்கை காசுகளைப் பரப்பி வைத்து, அதன் மீது விழிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக கற்பக விநாயகர் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் கற்பக விருட்சமாய் வளரும் வகையில் வாழ்க்கை அமையும்.
source : dinasuvadu.com
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…