2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?! : யார் முகத்தில் விழித்தோம்?!

Default Image

நம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம்  என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் தென்படும் உருவம், வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடுவதாக இருக்கும். எனவே தெய்வத் திருவுருவங்களின் மீது விழிப்பது நல்லது. நிலைக்கண்ணாடி, தண்ணீர், ஆலயக் கோபுரம் போன்றவற்றையும் பார்த்து இருக்கலாம்.
நம் வீட்டு பூஜையறையில் கனிகளை பரப்பி வைத்துப் கண் விழித்தால் கனிவான வாழ்க்கை அமையும். வலம்புரிச் சங்கை காசுகளைப் பரப்பி வைத்து, அதன் மீது விழிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக கற்பக விநாயகர் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் கற்பக விருட்சமாய் வளரும் வகையில் வாழ்க்கை அமையும்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்