பிரதோஷகாலங்களில் செய்ய வேண்டியவை
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர்.
அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சிவனின் வாகனமான நந்திக்கும் பிரதோஷம் மிக முக்கிய நாளாகும். நந்தி பகவான் நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் அறிந்தவர். சிவனின் சந்தேகங்களை அவர்தான் தீர்ப்பார் என நம்பபடுகிறது. எவ்வளவு படித்தாலும் அடக்கமாக இருப்பார். அதனால் தான் கோயில்களில் அவரது அமைதியாக படித்தவற்றை அசைபோடும்படி இருக்கும்.