வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருமொழித் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
பகல்பத்து விழாவின் 9-ம் நாளில், ஸ்ரீ நம்பெருமாள், முழுவதும் முத்தால் ஆன முத்தங்கி அலங்காரத்தில், மார்பில் மஹாலெக்ஷ்மி பதக்கம் முத்து அபயஹஸ்தம், முத்துமாலை, முத்து குல்லாய், வைரத்தால் ஆன அர்த்தசந்திர ஹாரம், நெத்திச்சுட்டி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி உள்ளது. இது…
ஓமலூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ-29) அதிமுக கள…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்து கடந்து 2-3 நாட்களாக வானிலை ஆய்வாளர்களுக்கு ஆட்டம் காட்டி வந்தது. இதனால், அவர்கள்…
இந்தோர் : இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறார். க்ருனால்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி…