சிறப்பை தரும் ஏகாதசி..!!எப்படி விரதம் இருப்பது..??விளம்பி வருட ஏகாதசி விரத நாட்கள்..!!
விரதங்களிலே சிறப்பு வாய்ந்து ஏகாதசி விரதம் என்று பெருமாளே கூறுவதாக புராணங்கள் கூறுகின்றன அதன்படி ஏகாதேசி அன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். பால்,பழம்,கிழங்கு மட்டும் சாப்பிடலாம்.மறுநாள் அதாவது துவாதசி அன்றைக்கு சீக்கீரம் எழுந்து சுவாமிக்கு திருவாராதனை அதாவது (ஆரத்தி )செய்து விட்டு துளசி தீர்த்தம் குடித்துவிட்டு பின்னர்
ஆகாரம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.ஏகாதேசி விரதம் பித்ரு சாபத்தை போக்குவதாகவும்,வைகுண்டத்தை அடைய எளிய வழி என்பது இன்றளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த விரதத்தின் முலம் விஷ்ணுவின் பூர்ண கடாஷ்சம் கிடைப்பதாகவும்,அதன் முலம் வீட்டில் லட்சிமி கடாஷ்சம் பெருகும் என்பது ஐதீகம்
விளம்பி வருடத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாட்கள்
வளர்பிறை ஏகாதசி
வைகாசி 11 (25.05.2018) வெள்ளி – அதிக ஏகாதசி
ஆனி 09 (23.06.2018) திங்கள் – நிர்ஜல ஏகாதசி
ஆடி 07 (23.07.2018) திங்கள் – விஷ்ணு சயன ஏகாதசி
ஆவணி 06 (22.08.2018) புதன் – புத்திரத ஏகாதசி
புரட்டாசி 04 (20.09.2018) வியாழன் – பரிவர்த்தன ஏகாதசி
ஐப்பசி 03 (20.10.2018) சனி – பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை 03 (19.11.2018) திங்கள் – பிரபோதின ஏகாதசி
மார்கழி 03 (18.12.2018) செவ்வாய் – வைகுண்ட ஏகாதசி
தை 03 (17.1.19) வியாழன் – பீஷ்ம, புத்திர ஏகாதசி
மாசி 04 (16.02.2019) சனி – ஜெய ஏகாதசி
பங்குனி 03 (17.03.2019) ஞாயிறு – ஆமலகி ஏகாதசி.
விளம்பி வருடத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி நாட்கள் :
தேய்பிறை ஏகாதசி
வைகாசி 27 (10.06.2018) ஞாயிறு – அதிக ஏகாதசி
ஆனி 25 (09.07.2018) திங்கள் – அபரா ஏகாதசி
ஆடி 22 (07.08.2018) செவ்வாய் – யோகினி ஏகாதசி
ஆவணி 21 (06.09.2018) வியாழன் – காமிகா ஏகாதசி
புரட்டாசி 19 (05.10.2018) வெள்ளி – அஜ ஏகாதசி
ஐப்பசி 17 (03.11.2018) சனி – இந்திரா ஏகாதசி
கார்த்திகை 17 (03.12.2018) திங்கள் – ரமா ஏகாதசி
மார்கழி 17 (01.01.2019) செவ்வாய் – உற்பத்தி ஏகாதசி
தை 17 (31.01.2019) வியாழன் – சபலா ஏகாதசி
மாசி 18 (02.03.2019) சனி – ஷட்திலா ஏகாதசி
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்