புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்…!! திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு…!!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
இக்கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துரசிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்