பித்ரு தோஷமா கவலையை விடுங்க.!! இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க..!!

Default Image

பித்ரு தோஷம் இருந்தால் வேலை கிடைப்பதில் தாமதம்,திருமண தடை,குழந்தை பெறுவதில் தாமதம் கணவன்-மணைவிக்கிடையே பிரச்சணை , மன அமைதியின்மை   போன்ற பிரச்சனைகள் எல்லாம் பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்றால் பித்ருதோஷம் ஏற்படுகிறது.

முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் மட்டுமே  தெய்வத்தை வணங்கும் நமக்கு பலன் கிடைக்கும் இல்லை என்றால் அவற்றை நம் முன்னோர்களே தடுத்துவிடுகின்றன இதனால் தன் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் பொண்ணுக்கு திருமணம் ஆகல,குழந்தை இல்லை என பல குறைகள் ஏற்பட பித்ருதோஷமே காரணம்.

பித்ருதோஷம் நீக்க கூடிய அற்புதமான சிவதலம் ஒன்று திருச்சி – கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகும் இங்கு உள்ள நவக்கிரஹங்களை வழிபட்டால் பித்ருதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

முன்பொருமுறை நாகம நாயக்கர் என்பவர் பிதுருதோஷம் நீங்க காவிரிக்கரையில் காசி விஸ்வநாதர் – ஸ்ரீவிசாலாட்சிக்கு கோயில் கட்டினார் என்கிறது கல்வெட்டுகள் அத்துடன் அனைத்து தோஷங்களும் நீங்க தேவியருடன் நவக்கிரஹங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பலனடைந்தார்.

ஆலமரங்கள் இப்பகுதியில் நிறைய உண்டு. அதன் பழங்கள் கீழே விழுந்து பழம் ஊர் ஆனது. பின்னர் அது மருவி பழுவூர் ஆனது. இப்போது பழூர் எனப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள நவக்கிரஹங்களை வழிபட்டால் பித்ருதோஷம் நீங்குகிறது.

நீங்கலும் ஒரு முறை சென்று வாருங்கள் நலன் கிட்டும் ஈசன் அருளும்,முன்னோர் அருளும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence