பாற்கடலில் கிடைத்த முக்கிய பொருள் துளசி
மும்மூர்த்திகளில் ஒருவராக வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவர்தான் காக்கும் கடவுளாகவும் வணகபடுகிறார். இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுவது இந்த துளசி . அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவர்களின் முக்கிய இடம் துளசிக்குதான் உண்டு. தூய்மையின் மறுஉருவம் துளசி.
பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் மகாவிஷ்ணுவுக்கு துளசி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுவே துளசியின் பெருமையைச் சொல்லும். துளசிக்கு மரணத்தைக் கூட தள்ளிப்போட வைக்கும் சக்தி உள்ளது என்கிறது புராணங்கள். நல்ல தேவதைகள் வாசம் செய்யும் துளசியை, உயிரிழந்தவரை அடக்கம் செய்யும்போது சிதையில் சேர்ப்பதால், அவரது பாவங்கள் அகலும் என்பதும் நம்பிக்கை.
மருத்துவ மூலிகையாக செயல்படும் துளசியின் சாறு, பல நோய்கள் குணமாக உதவுகிறது. காற்றிலுள்ள மாசுக்களை அகற்றி தூய காற்றை சுவாசிக்க வைக்கிறது. ஆலயங்களில் துளசி தீர்த்தம் தருவதின் பலன் எண்ணற்றது.
பெருமாள் தலங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கும் துளசி, மூல முதற்கடவுளாக விளங்கும் விநாயகப்பெருமானுக்கும் அர்ச்சனைக்குரியதாகிறது. துளசி அர்ச்சனை செய்பவர்களுக்கு, நுண்ணறிவு பலன் கிட்டும்.