சிவ பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி அப்படி சிவனுக்காக படைக்கப்பட்ட அனைத்தும் ஐந்தாகும் , சிவநாமமும் ஐந்தாகும் நம் இந்தியாவில் சிவனுடன் தொடர்புடைய பஞ்சங்கள்
பஞ்ச பூதங்கள்…!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
பஞ்சாட்சரம்…!
சிவமூர்த்தங்கள்….!
பைரவர் – வக்கிர மூர்த்தி , தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி , பிச்சாடனர் – வசீகர மூர்த்தி , நடராசர் -ஆனந்த மூர்த்தி ,சோமாஸ்கந்தர் – கருணா மூர்த்தி
பஞ்சலிங்க சேத்திரங்கள்…!
பஞ்சவனதலங்கள்…!
முல்லை வனம் -திருக்கருகாவூர் , பாதிரி வனம் -அவளிவணல்லூர் , வன்னிவனம் – அரதைபெரும்பாழி , பூளை வனம் – திருஇரும்பூளை, வில்வ வனம் – திருக்கொள்ளம்புதூர்
பஞ்ச ஆரண்ய தலங்கள்…!
பஞ்ச சபைகள்…!
திருவாலங்காடு -இரத்தின சபை , சிதம்பரம் -பொன் சபை , மதுரை -வெள்ளி சபை திருநெல்வேலி – தாமிர சபை ,திருக்குற்றாலம்- சித்திர சபை
ஐந்து முகங்கள்…!
ஈசானம் – மேல் நோக்கி ,தத்புருடம் -கிழக்கு ,அகோரம் -தெற்கு ,வாம தேவம் -வடக்கு , சத்யோசாதம் -மேற்கு
ஐந்தொழில்கள்…!
படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல்,அருளல்
ஐந்து தாண்டவங்கள்…!
காளிகா தாண்டவம் ,சந்தியா தாண்டவம் ,.திரிபுரத் தாண்டவம் ,ஊர்த்துவ தாண்டவம் , ஆனந்த தாண்டவம்
பஞ்சபூத தலங்கள்…!
இறைவனும் பஞ்சபூதமும்…!
நிலம் – 5 வகை பண்புகளையுடையது (மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை ) ,நீர் – 4 வகை பண்புகளையுடையது (சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை ) ,நெருப்பு – 3 வகை பண்புகளையுடையது (ஒளி , ஊறு ,ஓசை ) ,காற்று – 2 வகை பண்புகளையுடையது (ஊறு ,ஓசை ) ஆகாயம் – 1 வகை பண்புகளையுடையது (ஓசை )
‘ஆ’ ஐந்து…!
பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்
ஐங்கலைகள்…!
நிவர்த்தி கலை ,பிரதிட்டை கலை ,வித்தை கலை ,சாந்தி கலை ,சாந்தி அதீத கலை
பஞ்ச வில்வம்…!
நொச்சி ,விளா ,வில்வம் ,கிளுவை ,மாவிலங்கம்
ஐந்து நிறங்கள்…!
ஈசானம் – மேல் நோக்கி – பளிங்கு நிறம் , தத்புருடம் – கிழக்கு – பொன் நிறம் , அகோரம் -தெற்கு -கருமை நிறம் ,வாம தேவம் -வடக்கு – சிவப்பு நிறம் , சத்யோசாதம் -மேற்கு – வெண்மை நிறம்
பஞ்ச புராணம்…!
தேவாரம்,திருவாசகம்,திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு ,பெரியபுராணம்
இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து…!
திருநீறு பூசுதல்,உருத்ராட்சம் அணிதல்,பஞ்சாட்சரம் ஜெபித்தல்,வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறை ஓதுதல்
பஞ்சோபசாரம்…!
சந்தனமிடல் ,மலர் தூவி அர்ச்சித்தல் ,தூபமிடல் ,தீபமிடல் ,அமுதூட்டல்
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…