நம்மை விட்டு சென்ற பதவியை திரும்ப பெற்று தரும் முருகன்
முருக பெருமானுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைககள் மிகவும் உகந்த நாளாகும். அன்றைய பொழுதில் முருகனை வேண்டி விரதமிருந்தால் நாம் இழந்த உத்தியோகம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதன் காரணம் என்ன என்னவென்றால் செவ்வாய், வெள்ளிகளில் கிருத்திகை, சஷ்டி திதிக்கும் உகந்த நாட்களாகும். ஆகவே அந்த நாட்களில் முருகனை வேண்டி விரதமிருக்க நல்ல நாளாகும். மேலும், கந்தசஷ்டி மற்றும் தைபூசம் அன்றைய நாட்களும் முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அன்றைய நாட்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யபடுகின்றன.
அன்றைய நாட்களில் காலையிலேயே குளித்து விட்டு முருகனின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து ஒரு வேலை மட்டும் உணவு உண்டு விரதமிருக்கலாம். அப்படி இருக்க முடியாதாவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால் நம்மை விட்டு விலகி போன நம் வேலை நம்மை தேடி வரும்
source : dinasuvadu.com