தொடங்கிய வேலை தடைபடுகிறதா..!! தடையின்றி நிறைவேற சாமுண்டி காயத்ரி!! மந்திரத்தை ஒருமுறை சொல்லுங்கள் போதும்.!!!

Default Image

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள்.

பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை.

‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.நானும் இதை உணர்ந்துள்ளேன் நீங்களும் இதனை சொல்லி பாருங்கள் தடைபடும் வேலை நிச்சயம் தடையில்லாமல் நடைபெறும்.

மேலும் நல்ல தகவலுடன் மீண்டும் சந்திப்போம்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்