திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு – ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம்…!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசைக்கு, முன் தினத்தன்று வரும் பிரதோஷ திருவிழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, பெரிய நந்தி பகவானுக்கு விபூதி அபிஷேகம், சந்தன அபிஷேகம், பால், தயிர் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவானின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.