திருப்பதி கோயிலின் பணம்…!! 4 ஆயிரம் கோடியை வங்கியில் டெபாசிட்…!!! தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!!!
உலகப் பிரசித்திபெற்ற தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் செய்கின்றனர். மேலும் நன்கொடைகள் அதிகமாகக்கிடைப்பதால் , அவை வங்கிகளில் டெபாசிட்செய்யப்படுகின்றன.
அந்தவகையில்தற்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தானம் அலுவலர் ஏ.கே சிங்கால்செய்தியாளர்களிடம்பேசும்போது’ திருப்பதி தேவஸ்தான பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கோரின. இறுதியில், 7 புள்ளி 32என்ற வட்டி விகிதத்தில் இண்டஸ் இண்ட் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய்டெபாசிட்செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்