திருநாகேஸ்வர நாகநாதர் கோவில் கார்த்திகை கடைஞாயிறு விழா..! கொடியேற்றத்துடன் தொடங்கியது…! 

Default Image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகுதலமான நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்திரன், சூரியன் வழிபட்டார்கள் என்றும் அதன் மூலம் பேறு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு விழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் கொடி மரத்து சிறப்பு ஹோமம் மகா தீபாராதனை நடைபெற்றது.மேலும் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனையும் மேலும் 45 அடி உயர பிரமாண்ட மாலையும் அணிவிக்கப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதுஇந்த கொடியேற்ற விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருதலத்தில் வருகிற 6-ந் தேதி திருக்கல்யாணமும் அதன் பின்னர்  8-ந் தேதி ரோட்டமும் மற்றும் 9-ந் தேதி சூர்ய புஷ்கரணியில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்றைய தினம் இந்த கோவில் குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்