திருச்செந்தூரில் திரண்ட பக்தர் அலைக்கு நடுவே மிதந்து வந்த தேர்..!

Default Image

முருகனின் ஜென்ம நட்சத்திரமான  விசாகம் நட்சத்திரத்தை வைகாசி மாதத்தில் முருகனின் ஆறு படை வீடுகளும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

 

அதன் படி முருகனின் இரண்டாம் படைவீடாக திகழக்கூடிய திருச்செந்தூரில் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது.இத்திருவிழாவானது வசந்த விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் அப்படி வசந்த விழாவானது கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.

Related image

தொடங்கிய நாள் முதல்  அபிஷேக ஆராதனை மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமி ஜெயந்திர நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டவம் வந்து சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

Image result for vaikasi visakam  tiruchendur

இவ்வசந்த விழாவின் கடைசி நாளான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு  அதிகாலை 1 மணிக்கே கோவில் நடைத் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து சுவாமி வசந்த மண்டப வத்தை 11 முறை வளம் வரும் நிகழ்வு நடைபெற்றது.பின் சுவாமி தங்க சப்பரத்தில் வள்ளி தெய்வானை உடன்  எழுந்தருளி கிரிவலம் வந்தார்.

Related image

இத்தகைய நிகழ்வுகளை எல்லாம் காண பல்வேறு மாவட்ட ல்ட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய நிலையில் வைகாசி விசகத்தை முன்னிட்டு நடைபெறும்          தேரோட்டமானது  மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.தேரோட்டத்தில் பங்கு கொண்டனர். கடலில் நீராடி மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்