தலைமை பொறுப்பு..அரசியலில்..பதவி.அரசாங்க வேலை…அதிகார..பொறுப்பு போன்றவை கிடைக்க..!! இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!!கண்டிப்பாக நல்ல செய்தி வரும்..!!

Published by
kavitha

பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் ” ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும்.

சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அரசாங்க வேலைகள்,அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவான் எழுந்தருளி காட்சி தருகிறார்.

இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில் இது.

நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.நவக்கிரகங்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை – திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.-பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம்.

நம் நாட்டை ஆண்ட மன்னர்களையோ அல்லது அரசாங்க அதிகாரி அதாவது ஒரு IAS அதிகாரி எடுத்து கொண்டால் அவருடைய ஜாதகத்தில் சூரியன் ஆட்சிபலம் நன்றாக இருக்கும் அதனால் தான் அரசாங்க உயர் அதிகாரியாக பணிபுரிகிறார்.பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் அரச பதவிகளில் தான் பெறும்பாலும் இருப்பார்கள் காரணம் அவர்களின் ராசிநாதன் சூரியன்.

நாமும் சூரியனார் கோவில் சென்று சூரிய பகவணை வணங்கினால் போதும் மற்ற எல்லாம் அவர் அருளால் நமக்கு சூரிய பலன் நன்றாக கிடைத்து அரசாங்க வேலை முதல் அரச பதவி வரை தேடி வரும் அப்படி வருந்துள்ளதாக அனுபமுள்ளவர்கள் பகிர்ந்துள்ளனர் நீங்களும் சென்று வாருங்கள்

மீண்டும் நல்ல தகவலுடன் சந்திப்போம்…..

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago